வெற்றியின் மறைபொருள்.

வெற்றியாளர்களை நாம் தொலைவில் இருந்து பார்ப்பதற்கும் உண்மையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன...

வெற்றியாளர்கள் அனைவரும் எந்நேரமும் முழு உற்சாகத்துடனே எதிர்நீச்சல் அடித்து வெற்றியைப் போகிற போக்கில் தட்டிச் செல்வார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால்!, அவர்களுக்குள்ளும் மனப்போராட்டங்கள் நடைபெறுகின்றன...

எல்லா வெற்றியாளர்களுக்கும் முயற்சியைக் கைவிடுவதற்கான உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். கனவைக் கைவிடச் சொல்லி உள்ளிருந்து வரும் எச்சரிக்கைக் குரல்கள் அவை...!

உன்னிடத்தில் பணம் இல்லை. உனக்குக் குடும்பப் பின்னணி கிடையாது. உன் கனவு இலக்கை பலரும் கண்டு தோல்வியைச் சந்தித்திருக்கின்றனர். இவ்வாறெல்லாம் உள்ளிருந்து ஒரு குரல், நம்மைப் போலவே அவர்களுக்கும் எப்போதும் கேட்டுக் கொண்டு இருக்கும்...

பெரும் சறுக்கலையும், வீழ்ச்சியையும் சந்திக்கும் போது எல்லாம் கனவுகளை கைவிடச் சொல்லும் அக்குரல் இன்னும் உரக்க ஒலிக்கும்...

நீ நினைத்ததை அடைய, நீ திட்டமிட்டதை விட இரு மடங்கு நேரமாகலாம். அதற்கு நிறைய பயிற்சிகளும் உழைப்பும் தேவைப்படும்...

நீண்ட கால கடினப் போராட்டங்கள் உன்னை வருத்தலாம். ஆகவே முயற்சியைக் கைவிட்டு விடு என ஒரு குரல் ஒலிக்கும்...

ஆனால்!, வெற்றியாளர்கள் அந்த குரல்களுக்கு செவிமடுப்பதில்லை...

நீங்கள் அக்குரலுக்குச் செவி சாய்த்து விட்டால், நீங்கள் எதை நோக்கி ஓடுகின்றீர்களோ அதை இடையிலேயே விட்டு விட்டால், நீங்கள் தோல்வியுற்ற பலகோடி பேர்களில் நீங்களும் ஒருவர் ஆவீர்...

ஆனால்!, வெற்றியாளர்கள் எங்கே வேறுபடுகிறார்கள் தெரியுமா...? 

கடினமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன் மூலம் புகழையும் பெறுகிறார்கள்...

எவ்வளவு வலிமையற்று, சோர்வுற்று இருந்தாலும், தவறுகள் செய்திருந்தாலும், திரும்பி நின்று போராடலாம் என்னும் எண்ணம் அவர்களுக்கு ஓங்கும். அதுவே அவர்கள் இன்று இருக்கும் நிலைக்குக் காரணம்...!

ஆம் நண்பர்களே...!

தோல்விகளும், துன்பங்களும், இடையூறுகளும் வந்தாலும், கொண்ட மறைபொருளில்  இருந்து விலகாதிருத்தலும் கூட ஒரு வெற்றி தான்...! (மறைபொருள்-

இலட்சியம்)

அந்த மெல்லிய இழையை நீங்கள் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். அது உங்களை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும்...!!

இதுவே!, வெற்றியாளர்களின் வெற்றிக்கான மறைபொருள்...!!

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.