கொலஸ்ட்ராலை தண்ணீரினால் கட்டுப்படுத்தலாமா?

நமது ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரித்து விடுகிறது.

தவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து விடுகிறது.

❇️ முக்கியமான காரணம்

கொழுப்பு நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் ஆகியவை தான் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது நரம்புகளில் குவிந்து காணப்படும். இதன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகின்றன.

கொலஸ்ட்ரால் படிவத்தின் காரணமாக இதயம் தொடர்பான பலவித நோய்கள் பாதிக்கும்.

❇️அதிகரிப்பினால் ஏற்படும் பிரச்சனை

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மற்றும் இரத்தம் சரியாக இதயத்திற்குச் செல்லாதபோது ​​மாரடைப்பு ஏற்படலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து மருந்துகளை உட்கொள்ளலாம் மற்றும் எளிமையான வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே உடல் எடையை குறைக்கலாம்.

❇️ தண்ணீரினால் குறைக்கும் முறை

அனைவரது வீடுகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய தண்ணீரை வைத்தே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.

தண்ணீரை சுட வைத்து வெந்நீராக அருந்துவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு சேர்வதால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு வெந்நீர் குடிப்பது மிகவும் பயனுள்ள தீர்வாகும். தொடர்ந்து சூடான நீரை உட்கொள்வது லிப்பிட் ப்ரோபைலை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் தமனிகளில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.

சூடான நீர் இரத்த திரவத்தை விரைவாக அதிகரிக்கிறது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் இரத்தம் மெலிந்து இரத்த ஓட்டம் மேம்படும்.

எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

இதனை சாப்பிடுவதால் உடலில் ட்ரைகிளிசரைடு அதிகரிக்கிறது. வெந்நீரை குடிக்கும்போது ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வது தடுக்கப்படுகிறது.

பூண்டை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.