சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா?


சமைத்த உணவை சூடுபடுத்துவதில் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதல் விடயம்… சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுவதும் அழிந்துவிடும்.
உணவில் ஸ்போர் (Spore) என ஒன்று இருக்கும். அதாவது அதை பக்டீரியாவின் குழந்தை எனலாம். 

முதல்முறை சமைக்கும்போது, அந்தச் சூட்டில் அந்த ஸ்போர் செயலிழந்து விடும். சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அல்லது குளிரூட்டியில் வைக்கும்போது அந்த ஸ்போர் மீண்டும் பக்டீரியாவாக உருவெடுக்கும்.

பொதுவாக உணவை சூடுபடுத்தும்போது, முதல்முறை சமைக்கிற அளவுக்கு, தீவிரமாக சூடுபடுத்த மாட்டோம். எனவே அந்த நிலையில், மீண்டும் உயிர்பெற்ற பக்டீரியா சாகாது. அதன் விளைவாக அந்த உணவைச் சாப்பிடும் போது உணவு நச்சாகிறது (food poisoning). 

இந்த விதி கோழி இறைச்சி, காளான், உருளைக்கிழங்கு, பிரியாணி, இறைச்சி என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
உணவில் நைட்ரேட் என ஒன்று இருக்கும். இது காலிஃப்ளவர், கீரை வகைகளில் அதிகம் இருக்கும். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். அது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதாவது கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட பலவித புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாகக் கூடியது நைட்ரைட்.

எனவே நிறைய சமைத்து, மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி, இதுபோன்ற ஆபத்துகளை வரவழைத்துக் கொள்வதற்கு பதில், அவ்வப்போது சமைத்துச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.