நிம்மதி

நம்மை ஆட்டிப் படைப்பது 

நம் மனம்தான்.

உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதை உணர்.

மனதில் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

நாம் அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால் நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமலே இருக்கிறோம் என்பதை உணர்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் அக் கோபம் செய்து விடும்

அரண்மனைகளில் கூட  இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன அவற்றால் எந்தப் பயனும் இல்லா விட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.

வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல

உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால்

அவற்றின் அழுகல் நாற்றம்.

உதடுகளின் வழியே சொற்களாகவும்.

கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்.

அது ஒரு போதும் வெளிச்சத்தை வழங்காது.

நம்முடைய மனதை நம்மைத் தவிர வேறு யாராலும் நிம்மதி அடையச் செய்ய முடியாது.

எதிலுமே திருப்தி அடைய வேண்டும். திருப்தியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

நல்லது நடக்க விருப்பப்பட்டு நடக்கும் வரை அதற்காக செயல் பட வேண்டும். அதை நடத்த முயற்சிப்பதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டாலே நிம்மதியாய் உணர்ந்து செயல் படலாம்.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.