அடிக்கடி தலைவலியா அப்போ இதை எடுத்துக்கொள்ளுங்கள்.

தலைவலி என்பது பெரும்பாலான மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.

ஆனால் தலைவலி தொடர்ந்து இருந்தாலோ தினமும் இருந்தாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் உங்களுக்கு ஒற்றைத் தலைவலி, சைனஸ் அல்லது பலவீனமான கண்பார்வை பிரச்சனைக் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன.

இது நிலையை மோசமாக பாதிக்கலாம். அடுத்த முறை தலைவலியால் அவதிப்படும் போது உடனடியாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக இயற்கை வழியை பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வலி நிவாரணி மாத்திரைகள் உங்கள் தலைவலியைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இயற்கை சிகிச்சை எப்போதும் சிறந்தது.அந்த வகையில் நீங்கள் உண்ணும் உணவுகள் மூலம் உங்களுக்கு ஏற்படும் தலைவலியை குறைக்கலாம்.

❇️ இஞ்சி.

இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்த ஒரு மசாலா இஞ்சி. இது தலைவலியுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவுகிறது.

இஞ்சி கலவையில் வலி நிவாரணி விளைவுகள் நிறைந்துள்ளன.பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படும் இஞ்சியை தேநீர் செய்து குடிப்பது உங்கள் தலைவலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

இஞ்சியை அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து இஞ்சி தண்ணீராகவும் குடிக்கலாம். இஞ்சி டீ தயாரிக்கும்போது அதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து சாப்பிடுங்கள்.

❇️ தர்பூசணி.

பகலில் ஏற்படும் பெரும்பாலான தலைவலிகள் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படலாம்.

நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணம். உடலிலுள்ள நீரின் அளவை சமன் செய்ய, உடலுக்கு நீரேற்றம் தரும் உணவை உட்கொள்வது சிறந்தது.

அந்த வகையில் தலைவலியைக் குறைக்க தர்பூசணி ஒரு சிறந்த வழி. தர்பூசணியில் 92% நீர் உள்ளது.

பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை கொண்டுள்ள தர்பூசணி உடலில் திரவ சமநிலையை சீராக்க உதவுகிறது.மேலும் இது கோடைகாலத்தில் உடலுக்கு சிறந்த உணவாகவும் இருக்கும்.

❇️ காபி.

ஒரு கப் காபி தலைவலியைக் குறைப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு ஆறுதலையும் தரும்.காஃபின் தலைவலிக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்று கூறியுள்ளது.

பொதுவாக தலைவலிக்கு மூல காரணமாக இருப்பது பதற்றம் மற்றும் மன அழுத்தம். இதை குறைக்க காபி உங்களுக்கு உதவும்.

ஒற்றைத் தலைவலிக்கு காஃபின் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.

❇️ சால்மன் மீன்.

சால்மன் என்பது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒரு வகை கொழுப்பு மீன் ஆகும்.

இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன மற்றும் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும்.

சால்மன் மீன் தலைவலியை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.பங்கேற்பாளர்களில் ஒரு நாளைக்கு 2 கிராம் மீன் எண்ணெயை உட்கொள்பவர்கள், அடிக்கடி மற்றும் தீவிரமான தலைவலி இரண்டிலும் குறிப்பிடத்தக்க குறைப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.

❇️ புதினா தேநீர்.

புதினா தேநீர் உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமின்றி தலைவலியையும் தணிக்கிறது. புதினாவில் இருக்கும் மெந்தோல் என்ற கலவை வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தேநீர் பொதுவாக கவலை மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கும்.

ஏனெனில் இது ஒட்டுமொத்த அமைதியான விளைவைக் கொண்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.