நெருக்கடிகள் தான்

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளிலும் ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ்வில் நெருக்கடியான சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டு தான் வருகிறார்கள்..       

தொழிலில் நெருக்கடி, அலுவலகத்தில் நெருக்கடி, வீட்டில் நெருக்கடி, வெளியே சென்றால் போக்குவரத்து நெருக்கடி, இப்போது கொரானா என்னும் தொற்று நோய் நெருக்கடி என்று பல வகையில் சந்தித்துக் கொண்டு உள்ளார்கள்..

சில பேர் எனக்கு மட்டும் தான் ஏன் இப்படி நெருக்கடி வருகிறது என்று புலம்புவதைக் கேட்டு இருப்போம்.                                  

எல்லோருக்கும் நெருக்கடி வரத்தான் செய்கிறது.

அந்த நெருக்கடியை சாதிக்கப் பிறந்தவர்கள் அந்நெருக்கடியைச் சந்திக்கவும் சோர்ந்தும் போவதில்லை. நெருக்கடியை எதிர்கொண்டு தங்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். 

நெருக்கடி இல்லையென்றால், வாழ்க்கையே சுவையற்றுப் போய் விடும்.

நெருக்கடிகள் நம்மை முடுக்கும் போது, நமக்கு முன்னர் சாதித்தவர்கள் வாழ்வில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு நாளையும் புதிய துவக்கமாகவும், வாழ்வில் புதிய திருப்பமாகவும் பார்த்தால் வெற்றி உறுதி.

சராசரி மனிதர்களும் இப்படித் தான் எவ்வித நெருக்கடி இல்லாத வாழ்க்கையைத் தான் விரும்புகின்றார்கள். நெருக்கடி என்கிற சூழலை யாரும் விரும்புவது இல்லை. ஏனெனில், நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் நல்லது, வசதியானது என்ற மனப்போக்கு நம்மில் பல பேருக்கு உள்ளதைப் பார்க்கின்றோம்.

ஆனால்!, ஒருவருக்கு நெருக்கடி வருவதும் நல்லது தான். கசப்பான மருந்து இல்லாமல் நோய் குணமாகாது...

ஆம் நண்பர்களே...!

உண்மையில், நெருக்கடிகள் தான் நம்மை மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன, நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக் கொண்டு வருகின்றன...!

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.