நேர்மறை சிந்தனை

நேர்மறை சிந்தனை என்றால் என்ன...?

நேர்மறை சிந்தனை ( Positive thought ) என்பது 'நல்லவை எண்ணப்படுதல்' என்று அடிக்கடி படிக்கின்றோம், கேள்விப்படுகிறோம்...

முதலில் இந்த நேர்மறை சிந்தனை என்பதைப் பற்றி சரியாக நாம் புரிந்து வைத்திருக்கிறோமா!, என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது...

பொதுவாக, நமக்கு எப்போதும் நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். கெடுதல் நடக்காது என்று நம்புவது...

எது நடந்தாலும் நம்மை எதுவும் பாதிக்காது என்று நம்புவது...

நம்மை விடச் செல்வச் செழிப்பில் கீழே இருப்பவர்களைக் கண்டு அவர்களை விட நாம் நன்றாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சி கொள்வது...

இதுபோல் எண்ணுவது தான் நேர்மறை சிந்தனை என்று நம்புகிறோம். உண்மையில் இது  சரி தானா...? இல்லை, இல்லவே இல்லை...

வெளிப்படையாகக் கூற வேண்டுமானால் எல்லாருக்கும் வெற்றி, தோல்வி உண்டு. தோல்வியே இல்லாதவர் எவரும்  இல்லை. எனக்கு எதிராக எதுவும் நடக்காது...

நன்மை மட்டுமே எனக்கு விளையும். நான் எப்போதும், எதையும் நேர்மறையாகவே சிந்திப்பவன் என்று இதுபோல் வெறும் பகல் கனவுகளை மட்டும் கண்டுகொண்டு, செயல் ஏதும் செய்யாமல் இருந்தால், உறுதியாக தோல்வி மட்டுமே தொடர்ந்து வரும்...

ஒரு குழந்தையை கவனியுங்கள். நடை பயில்கையில் எத்தனை முறை கீழே விழுகிறது. ஆனால்!, அது தன் முயற்சியைக் கைவிடுகிறதா என்றால்...? இல்லையே...!

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க முயல்கிறது. முடிந்தால் அந்தக் குழந்தையின் முயற்சியைத் தடுத்துப் பாருங்கள்.  அவ்வளவு ஏன்?, ஒரு எறும்பின் வழியில் தடையை ஏற்படுத்திப் பாருங்களேன்...

சின்னஞ்சிறு எறும்பு, நடை பயிலும் குழந்தை  இவர்களது முயற்சியில் கால் பங்கு இருந்தாலும் போதும். உலகில் எவ்வளவோ சாதனைகளை நாம் புரியலாம்...

இதுதான் நேர்மறை சிந்தனை. வெற்றியா?, தோல்வியா!, எதைப்பற்றியும் கவலைப்படாமல் செய்ய வேண்டியதைத் தொடர்ந்து முழு வீச்சுடன் செய்யுங்கள்...

ஆம் நண்பர்களே...!

நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்திருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள்...!

நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம். உங்களுக்கு வெற்றி கிட்டும் வரை அயராது உழையுங்கள், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயல்படுங்கள்...!!

என்னால் முடியும் என்று நம்புங்கள். பலனில் கவனம் வைக்காதீர்கள். செயலில் மட்டும் ஈடுபாட்டுடன் சிறப்பாக செயல்பட முயலுங்கள் போதும். எந்தவொரு சிந்தனையிலும், இச்செயலை செய்ய முடியும், ஆனால்!, தடைகள் பல வரும். அதைச் சீராக்க வழிகள் பிறக்கும் என்கிற தெளிவு இருக்கிறதே!, அதுவே நேர்மறை சிந்தனை...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.