தொப்பையை குறைக்கும் முருங்கை டீ

கோடைகாலங்களில் கிடைக்கும் சில பருவ காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்கின்றன.

தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முருங்கையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கை பூ என முருங்கையின் அனைத்திலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

❇️முருங்கைக்காய் உணவுகள்

முருங்கைக்காய் சாம்பார் மற்றும் குழம்பு, முருங்கை இலை, பூ பொரியல் மற்றும் முருங்கை சூப் ஆகியவை மக்கள் அடிக்கடி செய்யும் பிரபலமான உணவு வகைகளாகும்.

முருங்கை மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் இப்போது பிரபலமான பானமாக அனைவராலும் உட்கொள்ளப்படுகிறது.

❇️தொப்பை கொழுப்பு

பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கும் முருங்கை தேநீர் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவுகிறது.

இந்த தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.இது முதன்மையாக பாலிபினால்கள் அல்லது தாவர கலவைகளை கொண்டிருக்கின்றன.

இந்த தேநீர் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, கொழுப்பைச் சேமிப்பிற்குப் பதிலாக ஆற்றலை உடலில் சேமிக்கிறது.

முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தி கொண்டவையாக உள்ளன. அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு மாற்றாக முருங்கை டீ-யை எடுத்துக்கொள்ளலாம்.

❇️இரத்த அழுத்தக் கட்டுப்பாடு

முருங்கை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் முருங்கை தேநீர், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் க்வெர்செடின் என்ற பொருள் இதிலுள்ளது. கூடுதலாக, இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதன் ஆக்ஸிஜனேற்ற திறன் காரணமாக வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் முருங்கை இலை தேநீர் உதவும்.

❇️இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கை இலை நல்ல உணவு. ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது.

இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் சி நிறைந்த முருங்கை இலை தேநீர், வகை -2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

❇️கொலஸ்ட்ரால் அதிகரிப்பை தடுக்கிறது

கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், முருங்கை இலை தேநீர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம் இதய நோய்களின் அபாயங்களைக் குறைக்கலாம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.