நகைச்சுவை உணர்வு...!

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் தேவையானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட...

நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர்கள் பட்டாளத்தை உருவாக்கி விடுவார்கள். 

அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். தலைமைப் பண்பின் மிக முக்கியமான செயலாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள்...

காரணம்!, நகைச்சுவை உணர்வு உடையவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்...

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு முறை வெளியூர் சென்ற நேரம், வாகனம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியது. வேறு வாகனத்திற்காக காத்திருந்த போது,

அந்த வழியாக வந்தவர்கள் வாகன விபத்தைக்

குறித்துக் கேட்டபொழுது,

“வாகனத்திற்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் இந்த மரத்தில் சாத்தி வைத்து இருக்கிறோம்…” என்றாராம்...

இன்றையக் காலகட்டத்தில் நமக்கு  நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு...

சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனைக் கொடிய துன்பத்தையும் துரத்த முடியும். மனதிற்கு உறுதியளிப்பது நகைச்சுவை உணர்வு தான் சிரிக்கக் கூடிய சக்தி தான். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள், அந்த புன்சிரிப்பு தான் எத்தனை அழகானது...!!

கண்ணுக்குள் தெரியாமல் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை...

மெய்யியல் (தத்துவ) நிபுணர்கள் சொல்கிறார்கள்,

''இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், துன்பங்கள் இவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்று தான் வழி" என்கிறார்கள்...

ஆம் நண்பர்களே...!

உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டு இருங்கள். உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்துடன் இருக்கிறீர்கள் என்று பொருள்...!

நாம் நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கின்றோமோ, அவ்வளவு காலம் கூடுதலாக வாழ்வோம். சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கை ஆகி விடும்...!!

அதனால்!, நம்மால் இயன்ற வரை சிரித்து வாழ்ந்து, நமது ஆயுள் காலத்தை அதிகரிப்போம். சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஆகவே!, மனம் விட்டு சிரியுங்கள்; நலம் சிறக்கும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.