சக்கரை வியாதி உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்!

இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குவது இந்த சக்கரை வியாதிதான்.

சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.

இந்த சக்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் எத்தனை சாப்பிடலாம்? என்ற பல கேள்விகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

அப்படி சக்கரை நோயுள்ளவர்கள் கையில் ஒரு முட்டையை வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருப்போம் அப்படியானவர்களுக்கு சிறந்த பதிவுதான் இது.

சக்கரை நோயாளிகளுக்கு முட்டை   

ஒரு முட்டையில் எமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் Dமற்றும் கல்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

ஆகவே தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டால் எமது உடம்பு பலமானதாக மாறும். முட்டையில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி போன்ற வகையான சத்துக்களும் உள்ளன.

இந்த முட்டை இரத்த சக்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போஹைட்ரேட் முட்டையில் குறைவாக இருக்கிறது.முட்டையில் இருக்கும் புரதம் செரிமானத்தை தாமதமாக்கி சாப்பிட்டவுடன் இரத்தசக்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கும்.

முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது, அதில் 15 வெள்ளையிலும், 60 கலோரிகள் மஞ்சள் கருவிலும் இருக்கிறது. இப்படி இருக்கும் முட்டையை சக்கரை நோயாளிகள் சாப்பிட்டால் வாரத்திற்கு 3 அல்லது 4 முட்டை சாப்பிடலாம்.

அவ்வாறு வெள்ளைப் பகுதியை மற்றும் சாப்பிடுபவர்கள் ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முட்டைகள் சாப்பிடலாம். மேலும், முட்டையில் 184 கிராம் கொலஸ்ட்ரோலும் 5 கிராம் நிறைவில்லா கொழும்பும் இருப்பதால் சக்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.     

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.