அன்பை விதைப்போம்.


நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற மிக அழகான, அன்புக்குரிய இந்த உலகம் அன்புக்காக ஏங்கித் தவிக்கிறது. அன்பு செய்கின்ற மனிதர்களாலே, இவ்வுலகம் அழகானதாக உருமாறி நிற்கிறது. அன்பு மட்டுமே இவ்வுலகில் மாறாமல் இருக்கிறது.

அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை.  எங்கு அன்பு இருக்கிறதோ,அங்கு செல்வமும்,வெற்றியும் இருக்கும்.

ஆம்!, ,உண்மையில் இவ்வுலகில் கொடுத்து வைத்தவர்கள் யார் தெரியுமா...? ஏன்!நீங்களாகவும் கூட இருக்கலாம்.

உண்மையில் இவ்வுலகில் உண்மையான அன்பு, பாசம் எவருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் இவ்வுலகில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...

ஏனென்றால்!, இவ்வுலகில் உண்மையான அன்பு பெரும்பான்மையானவர்களுக்குக் கிடைப்பதில்லை. போலியான ஒரு வாழ்க்கைக்குள் தான் பலர் வாழ்கின்றனர்.

யாருக்காக வாழ்கின்றோம்...? எதற்காக வாழ்கின்றோம்...? என்று கூடத் தெரியாமல் பலர் போலியான வாழ்க்கைக்கு உள்ளே சிக்கி வாழ்கின்றனர்...

உண்மையான அன்பு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் யாருக்காக வாழ்கின்றார்கள் என்று கூட அறிந்திருப்பார்கள்...

இவ்வுலகில் உண்மையான அன்பு முதலில் பெற்றோரிடம் இருந்தே கிடைக்கின்றது. அடுத்து கணவன் அல்லது மனைவியிடம் இருந்து கிடைக்கின்றது. காதலன் அல்லது காதலியிடம் இருந்து கிடைக்கின்றது.. நண்பர்களிடமிருந்து கிடைக்கின்றது...

இவ்வாறு பல வடிவங்களில் நமக்கு அன்பு கிடைக்கின்றது. ஆனால்!, இவ்வாறு கிடைக்கும் அன்புகளில் பல போலியானவைகளாக இருக்கும்...

ஒரு சிலரே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார்கள். அன்பு தான் நம்மை அதிக மகிழ்ச்சியான வாழ்வைக் கொடுக்கும்..  இவ்வுலகத்தில் நிலையானது அன்பு மட்டுமே...!

ஆம் நண்பர்களே...!

அன்பை விதைப்போம்...! ஆனந்தத்தை அறுவடை செய்வோம்...!!

இயலவில்லையென்றால், அன்பை அறுவடை செய்யும் வகையில் நம்மை மாற்றிக் கொள்வோம்...!!

அப்படியில்லாமல், வெறுப்பை மட்டுமே அறுவடை செய்யும் நிலை ஏற்படுமானால், நாம் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டோம் என்று பொருள்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.