எல்லாம் கடந்து போகுமடா.

சோமசுந்தரம் என்ற ஒருவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப் பட்டு படித்து அரசு வேலை யில் சேர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து மிகப் பெரிய இடத்திற்கு சென்று விடுவார்.

   கை நிறைய சம்பளம்.பை நிறைய கிம்பளம் என்று வளமான வாழ்வு.கடற்கரை அருகில் ஒரு பங்களா என்பது அவரது நீண்ட நாள் கனவு.

  வாய்ப்பு வந்த போது அதை அவர் நிறைவேற்றிக் கொண்டார்.முட்டுக்காடு போகும் வழியில் E.C.R ரோட்டுக்கு கிழக்கே கடற்கரைக்கு மிக அருகில் சவுக்கு மரங்களுடன் அற்புதமான பங்களா.

  2004 ஆம் வருடம் ஒரு கார்த்திகை மாத சுபயோக தினத்தில் குடும்பத்தோடு அங்கு குடி புகுந்தார்.

    அவருக்கு மிகப் பெரிய ஆனந்தம்.எதையோ சாதித்து விட்ட வெறி.உச்ச பட்ச  ஆணவத்துடன் அவரது வீட்டு மாடியில் இருந்து கடலை பார்த்துக் கொ ண்டு இருந்தார்.

  அடுத்த வாரம் அந்த வீட்டில் 2005 ஆம் வருட   புத்தாண்டு நிகழ்வை நண்பர்கள் சகிதம் பிரமாண்டமாய் கொண்டாட திட்டமிட்டார்.

  மறுநாள் காலை ஒரு ஆழிப் பேரலை! ஐந்தே நிமிடங்க ளில் சோமசுந்தரம், குடும்பம் பங்களா என மொத்தமாக காணாமல் போனார்.

 பத்து வருடங்கள் கழித்து அதே சென்னையில் அசோக் நகர் தாண்டி  கிண்டி யில் நாகராஜன்  என்ற  I .T யில் வேலை பார்க்கும் இளைஞன் புது காரு புது வீடு என்று தை மாதம் வரப் போகும் புது மனைவிக்காக தயாராக இருந்தான்.

  2015 டிசம்பர் மாதம் சென்னை நகர பெரு வெள்ளம்  நாகராஜனின் புது வீட்டில் சுவர்களை தவிர மற்ற அனைத்தையும் கடலுக்கு அள்ளிச் சென்று விட்டது.

  நாகராஜன் அனைத்தையும் இழந்தான்.ஆனாலும் கார், டி.வி , பிரிட்ஜ் ,வாஷிங் மெஷின், வீடு என்று இல்லாத அனைத்துக்கும் E.M.I  கட்ட அவன் மட்டும் உயிரோடு இருந்தான்.

  2016 டிசம்பரில் கடலூர் பண்ரூட்டி  அருகில் தங்கள் பூர்வீக பூமியில் பலா க்களும் முந்திரி யும் தன் வாழ் நாளில் காணாத அமோக விளைச்சலில்......... மகிழ்ச்சியில் திளைத்தார் செல்லத்துரை.

  அதற்கு காரணம் வேளாண்மை பட்டதாரி யான அவரது மகன் தான் என்ற பெருமிதம்.

  சிலமணி நேர  தானே புயல்.... அத்தனையையும் வேரோடு பிடுங்கி போட்டு விட்டு சென்றது.மறுநாள் மாரடைப்பில் செல்லதுரை மறைந்து போனார்.

   இந்த மாதிரி எத்தனையோ தினமும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இது  எதுவுமே நமக்கு தெரியாது.

  நம்மை பொறுத்தவரை இதெல்லாம் வெறும் பத்திரிக்கை செய்திகள். எப்பவுமே அடுத்தவனுக்கு வந்தா  தக்காளி சட்னி தான். நமக்கு வரும் போது  தான் அது ரத்தம் என்பது புரியும்.

  இந்த கொரோனா முடிஞ்சா தான் தெரியும் எத்தனை பேருக்கு ரத்தம் வருகி றது என்று.

  இயற்கை தினந்தோறும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண் ணெயுமாகவே  திரிகிறது.

    எந்த நேரம் எந்த கண்ணில் எதை தடவும் என்பது யாருக்கும் தெரியாது.

  இரண்டு கண்ணிலும் சண்ணாம்பை பூசினாலும் நம்மால் செய்யக் கூடுவது ஏதும் இல்லை.

  ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியேயில்லை. எப்படி இதை ஏற்றுக் கொள்ள இயலும் என்ற கேள்வி அனைவருக்குமே எழலாம்.

  ஆனால் வாழ்கை என்பது அப்படி பட்டது தான். நாம் அதை அப்படியே எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.வேறு வழியே இல்லை.

  சசிகலா எப்படி வாழ்ந்தார் என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனால் இன்று எப்படி இருக்கிறார் என்பதும் தெரியும். அவர் அதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியேயில்லை. 

எல்லாமும் ஒரு நாள் கடந்து போகும். யாராலும் அதை தடுக்க முடியாது. காலம் கனிந்து வரும் வரை துன்பங்களையும் துயரங்களையும் ஏற்றுக் கொண்டு பொறுமை காப்பது அவசியம்.

நம்மால் ஏதும் செய்ய முடியாது. எல்லாம் கடந்து போகுமடா .......... இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா......

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.