நல்ல நட்பே.

நண்பர்கள் என்பவர்கள் சாதி, மத, இன, மொழி எல்லைகளைக் கடந்து நம்முடைய எண்ணங்களின் வலிமையால் நம்மோடு பயணிப்பவர்கள்.

நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் பொம்மைகளாக இல்லாமல், நமது தவறுகளைத் தட்டிக் கேட்கும் தகப்பனாக மாறும் இயல்பை உடையவர்கள்.

பெற்றோர்களிடமும் மற்ற உறவுகளிடமும் கூற இயலாத பலவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலும்.

"உன் நண்பன் யார் என்று சொல்...? நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்" என்பார்கள். நண்பர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் குணமே நம்மை வந்து சேரும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம்.

அவர்களிடமே நமது மறைபொருள் அதாவது இரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம்.

சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள்.

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய நல்வினை ஆகும்.

ஐந்து வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு மரியாதையும் கூட

இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களைத் துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே...!

'நண்பர்களுக்காக எதையும் இழக்கலாம். எதற்காகவும் நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்...!'

நமக்கு வாய்க்கும் மனிதர்களை நேசிக்கும் பழக்கத்தை அடுத்தத் தலைமுறைக்கு குறிப்பாக நமது குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

அவர்களின் நண்பர்கள் பற்றிக் கேளுங்கள். முடிந்தால் அவர்களை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லுங்கள்.

ஆம் நண்பர்களே...!

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும் நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும்...!

ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ் பெற்றிருக்க முடியும். அப்படிப்பட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்...!!

சிறு சிறு மகிழ்வுகளை நமக்குள் நிகழ்த்திய அந்த நண்பர்கள் தான் இன்று நாம் பெரிய பெரிய சாதனைகள் செய்வதற்கும் காரணமாக இருக்கிறார்கள்...!!!

"நண்பர்களைத் தேடுங்கள்...! நலமாக வாழ்வதற்கு...!"

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.