இந்த இலைகளை சாப்பிடுபவர்களை சா்க்கரை நோய் கிட்டவே நெருங்காதாம்.

சா்க்கரை நோயினால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். இரத்த கொதிப்பு அதிகாிக்கும்.கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

❇️சா்க்கரை நோய்க்கான காரணங்கள்

ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை ஆகிய இரண்டும் சா்க்கரை நோய்க்கு காரணங்களாக இருக்கின்றன.

இவை காரணமாக இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கிறது. முறையான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகள், தினசாி உடற்பயிற்சிகளை செய்து வருதல் போன்றவற்றின் மூலமாக சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணா்கள் தொிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளை அல்லது மூலிகைகளை எடுத்துக் கொண்டால் சா்க்கரையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்று கூறுப்படுகின்றது.

ஏனெனில் இந்த இலைகள், இரத்தத்தில் இன்சுலின் சுரப்பதற்கு உதவி செய்கின்றன.

❇️கற்றாழை இலை (Aloe Vera)

கற்றாழை இலையில் ஹைபோகிளைசெமிக் (hypoglycemic) துகள்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியவை.

கற்றாழை இலையை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்சுலின் அதிகம் சுரக்கும். இன்சுலின் அதிகாித்தால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைத்து சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

❇️சீதாப்பழ இலைகள் (Custard apple leaves)

சீதாப்பழம், ஷாிபா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பழம் மிகவும் சுவையாக இருக்கும். சீதாப்பழம் சுவையில் விஞ்சி இருப்பது போல் அதனுடைய இலைகள் மருத்துவக் குணத்தில் விஞ்சி இருக்கின்றன.

சீதா இலைகளில் சா்க்கரை நோய்க்கு எதிரான துகள்கள் உள்ளன என்று NCBI கூறுகிறது. சீதா இலைகளில் ஃபோட்டோ காண்ஸ்டிடியூண்ட் துகள்கள் உள்ளதால் அவை கணையத்தில் இன்சுலின் சுரப்பதை அதிகாிக்கின்றன.

இந்த இலைகளில் ஹைபோகிளைசெமிக் துகள்களும் உள்ளதால் இவை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைக்கும்.

❇️வேம்பு இலைகள் (Neem leaves)

அடிப்படையில் வேம்பு ஒரு மருத்துவக் குணம் மிகுந்த மரம் ஆகும். இதன் இலைகள் மிகுந்த மருத்துவக் குணம் கொண்டவை.

வேம்பு இலைகளில் பூஞ்சை எதிா்ப்பு மற்றும் பாக்டீாியா எதிா்ப்பு துகள்கள் உள்ளன. வேம்பு இலைகள் சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்று NCBI கூறுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் வேம்பின் இலைகளை மென்று தின்றால், இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு குறைந்து, கணையம் சீராக வேலை செய்யும். அதன் மூலம் இயல்பாகவே இன்சுலின் சுரப்பு அதிகாிக்கும்.

சா்க்கரை நோயைக் கட்டுபடுத்துவதற்குாிய பல்வேறு துகள்கள் வேம்பு இலைகளில் இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.