வரலாற்றில் இன்று மே 23.2023

மே 23 கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.

❇️ இன்றைய தின நிகழ்வுகள்

1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

1498 – திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது.

1633 – இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[1]

1788 – தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது.

1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத் தன்னை அறிவித்தார்.

1829 – வியன்னாவில் சிரில் டேமியன் என்பவருக்கு அக்கார்டியனுக்கான காப்புரிமம் வழங்கப்பட்டது.

1844 – பாரசீக மதகுரு பாப் பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. பகாய் சமயத்தவர் இந்நாளை புனித நாளாகக் கொண்டாடுகின்றனர்.

1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் மரியானோ பரேதசு அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தார்.

1911 – நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கூட்டுப் படைகளுடன் இணைந்தது.

1932 – பிரேசிலில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வர்காசுக்கு எதிரான போராட்டங்களில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1939 – அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இசுக்குவாலசு சோதனை ஓட்டத்தின் போது நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிச் இம்லர் நேச நாடுகளின் கைதியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.

1948 – இசுரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார்.

1949 – பனிப்போர்: மேற்கு செருமனி என்ற நாடு அமைக்கப்பட்டது.

1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.

1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.

1960 – சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 61 பேர் உயிரிழந்தனர்.

1992 – இத்தாலியின் மாஃபியாக்களுக்கு எதிரான நீதிபதி கியோவானி பால்க்கோனி, அவரது மனைவி உட்பட ஐவர் சிசிலியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1993 – எரித்திரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

1995 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1998 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

2006 – அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.

2008 – இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2008 – அனைத்துலக நீதிமன்றம் “நடுப் பாறைகள்” என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.

2014 – காங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.

2016 – இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் யெமன், ஏடன் நகரில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2016 – இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் சிரியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் வரையானோர் காயமடைந்தனர்.

❇️ இன்றைய தின பிறப்புகள்

1707 – கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1778)

1848 – ஓட்டொ லிலியென்தால், செருமானிய விமானி, பொறியியலாளர் (இ. 1896)

1883 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (இ. 1939)

1888 – அலெக்சாந்தர் விசோத்சுகி, உருசிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1973)

1908 – ஜான் பார்டீன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1991)

1914 – பார்பரா வார்ட், ஆங்கிலேய பொருளியலாளர், ஊடகவியலாளர் (இ. 1981)

1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)

1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)

1942 – கோவெலமுடி ராகவேந்திர ராவ், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

1951 – அனத்தோலி கார்ப்பொவ், உருசிய சதுரங்க வீரர்

1951 – அன்டோனிசு சமராசு, கிரேக்கத்தின் 185வது பிரதமர்

1967 – ரகுமான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.

1987 – சதீஸ், தமிழகத் திரைப்பட நடிகர்

❇️ இன்றைய தின இறப்புகள்

230 – முதலாம் அர்பன் (திருத்தந்தை)

1370 – உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1320)

1423 – எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (பி. 1328)

1857 – அகுஸ்டின்-லூயி கோசி, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1789)

1895 – பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், கனிமவியலாளர் (பி. 1798)

1906 – ஹென்ரிக் இப்சன், நோர்வே இயக்குநர், நாடகாசிரியர் (பி. 1828)

1937 – ஜான் டி. ராக்பெல்லர், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1839)

1945 – ஹைன்ரிச் ஹிம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1900)

1949 – டபிள்யு. டபிள்யு. ஹேன்சன், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1909)

1973 – கம்பதாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1916)

1974 – டி. ஏ. மதுரம், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகை, பாடகி (பி. 1918)

1981 – உடுமலை நாராயணகவி, தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1899)

1996 – குரோனிது இலியூபார்சுகி, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1934)

2001 – பா. ராமச்சந்திரன், கேரளாவின் எட்டாவது ஆளுநர், தமிழக அரசியல்வாதி (பி. 1921)

2008 – பார்கவி ராவ், இந்திய எழுத்தாளர் (பி. 1955)

2014 – யூடித் யங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1952)

2015 – ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர், கணிதவியலாளர் (பி. 1928)

2016 – பி. ஆர். தேவராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குநர்

2017 – ரோஜர் மூர், ஆங்கிலேய நடிகர் (பி. 1927)

❇️ இன்றைய தின சிறப்பு நாள்

தொழிலாளர் தினம் (ஜமேக்கா)

உலக ஆமைகள் நாள்

மாணவர் நாள் (மெக்சிகோ)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.