உடல் எடையை குறைக்கும் பச்சை மிளகாய்.

உடல் எடையை குறைக்க பல்வேறு விதமான உத்திகளை நாம் கடைபிடித்திருப்போம்.

வெவ்வேறு உணவுகளை ஒன்று சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக உடல் எடை குறையும் என்ற பரிந்துரைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கும்.

மூலிகைகள், வாசனை பொருட்கள், வெதுவெதுப்பான தண்ணீர் போன்ற பல்வேறு உணவு முறைகளை கையாள்வதன் மூலமாக உடல் எடை குறையும் என்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும் என்றும் பலர் கூற கேட்டிருப்போம். 

📌 பச்சை மிளகாய்

உடல் எடையை குறைக்க பச்சை மிளகாய் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எடை இழப்புக்கு இது ஒரு எளிதான தீர்வாகும். ஏனெனில் பச்சை மிளகாயில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது மிகச் சிலருக்குத் தெரியும்.

பச்சை மிளகாயில் இது போன்ற பல பண்புகள் உள்ளன. இவற்றை உட்கொள்வது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற கூறுகள் பச்சை மிளகாயில் உள்ளன.

எனவே உடல் எடையை குறைக்க பச்சை மிளகாயை உணவில் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது காண்போம்.

📌எடை குறை குறைப்பு

எடை குறைக்க உதவுகிறது பச்சை மிளகாயுடன் தொடர்புடைய சில சான்றுகள் என்ன கூறுகிறது என்றால் பச்சை மிளகாயை நாம் சாப்பிடுவது எடை குறைக்க உதவும் என்று கூறுகின்றன. பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது,

இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் உடலின் கலோரிகள் குறைவதுடன் எடையும் குறைகிறது. 

பச்சை மிளகாயை உண்பதால் தீமைகளும் ஏற்படலாம்

பச்சை மிளகாயை உட்கொண்டால், அதை அதிகமாக சாப்பிடவே கூடாது.

ஏனெனில் பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

செரிமானம் பலவீனமாக இருந்தால், பச்சை மிளகாயை அதிக அளவில் சாப்பிட வேண்டாம்.

பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பச்சை மிளகாயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits Of Eating Green Chillies)

செரிமானம் பச்சை மிளகாயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது பெருங்குடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

சருமம் பளபளக்கும்- பச்சை மிளகாயில் உள்ள வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் ஈ இயற்கை எண்ணெயை உருவாக்குகிறது, இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பருக்கள், சொறி, புள்ளிகள், மற்றும் சுருக்கங்கள் இதன் உபயோகத்தால் குணமாகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.