வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி...!"

பெரும்பாலனோர் கடினமான வேலை என்றாலும் ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்து விடுகின்றார்கள். ஆனால்!, கடினமான வேலைகள் தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டுகின்றன.

அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்னவென்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன்முதலாகத் தெரிய வருகிறது...

ஒரு செயலில் இறங்க வேண்டுமா...!? என்ற தயக்கம் எழுகிற போது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும் என்று தான் உள்மனது சொல்லும்...

ஆனால்!, இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம் புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது...

ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸி சிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்து வந்த இளைஞர் ஒருவரின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலை பார்த்தார்.

விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞரும் செல்வார். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவருக்கு செங்கல் சுமப்பதொன்றும் மகிழ்வான வேலையல்ல...

ஓரிடத்தில் நின்று கொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும், வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஆனால்!, அந்த இளைஞர் மனஉறுதியுடன் செயல்பட்டார். செங்கற்கள் கைகளில் வந்து விழுகின்ற போதெல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரமேறிக் கொண்டிருந்தது...

ஒவ்வொரு முறை செங்கல்லைப் பிடிக்கும் போதும் வாழ்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உறுதி கொண்டார் அந்த இளைஞர். 

கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாகத் தான் வர வேண்டும் என்ற கனவுக்கு நெய் வார்த்துக் கொண்டிருந்தார் அவர்...

அந்தக் கனவு நனவானது. உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரராய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ் தான் அந்த இளைஞர்...

ஜெர்ரி ரைஸ், தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்ட போது கூறியவை வாழ்க்கைக்கு வழி காட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்...

ஜெர்ரி ரைஸ் சொல்கிறார்..

என்னை நோக்கி வீசப்பட்ட செங்கற்களைப் பிடிப்பது வேறு வழியில்லாத வேலை. ஆனால்!, பலர் வெட்டி வேலை என்று விமர்சனம் செய்தார்கள். 

ஆனால்!, அந்த வலி மிகுந்த பொழுதுகளை என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டு எதிர்காலத்தின் வரைபடத்தை இதயத்தில் வரைந்து கொண்டேன்...

அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் என்னுள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன...

கொளுத்தும் வெய்யிலில் அயராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்து இருக்கும் பக்குவத்தைப் பரிசாய்த் தந்தது...

ஆம் நண்பர்களே...!

வாழ்க்கையில் வெற்றி பெற..,

சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்...!

வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்பதில் விடாமுயற்சி இருக்க வேண்டும்...!

வென்று காட்ட வேண்டும் என்ற பிடிவாதம் இருக்க வேண்டும்...!!

அடைவதற்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்...!!

அந்தக் குறிக்கோள்களில் ஒரு தீவிரம் இருக்க வேண்டும்...!!!

ஆம், எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும், தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.