பூண்டு சாப்பிட்டால் உடல் சோர்வடையுமாம். இனி பூண்டை குறைத்து சாப்பிடுங்க

பூண்டு என்பது சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாகும்.

இதை உணவில் சுவைக்காகவும் மணத்திற்காகவும் பயன்படுத்துவார்கள். பூண்டு இல்லாமல் உணவே கிடையாது. அனைத்து உணவு வகைகளுக்கு பூண்டு தேவைப்படுகிறது. 

பூண்டு நம் உடம்பிற்கு ஆரோக்கியத்தை தரும். இருந்தாலும் இதனுடைய மணம் பிடிக்காததால் பலர் இதை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.

📌 பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எவை?

பூண்டில் விட்டமின் பி1, கல்சியம், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் காணப்படுகின்றது.

இவ்வாறு பூண்டில் நன்மைகள் இருந்தாலும் அதே இடத்தில் ஆபத்தும் இருக்கும். ஆகவே பூண்டை பெரிதளவில் உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். 

பூண்டு சாப்பிடுவதை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்துக் கொள்வோம்.

பூண்டு ஏன் சாப்பிடக்கூடாது?

பூண்டு உடம்பிற்கு சூடு தரும் என்பதால் குளிர்ச்சியான காலங்களில் சிலர் பூண்டை சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிட்டால் அது வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.  

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உட்கொண்டால் அவர்களின் உடல் பலவீனமடையும் மற்றும் சோர்வடையும்.

பூண்டில் அதிகமான அமில கலவைகள் காணப்படுவதால் மார்பில் அதிகமான நெஞ்செரிச்சல் ஏற்படும்.

கல்லீரலில் பிரச்சினை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்டால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துக்களின் தாக்கத்தை குறைக்கும்.

வயிற்றுப்போக்கின் போது இதை சாப்பிட்டால் குடலின் இயக்கத்தை அதிகரித்து வயிற்றுப்போக்கை மீண்டும் அதிகரித்துவிடும்.

கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் கண்களில் உள்ள ஆரோக்கியம் மீண்டும் மீண்டும் குறையும்.

ஏதாவது அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள தயாராகுபவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னரே பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.