மாங்காயுடன் உப்பு மிளகாய் சேர்த்து சாப்பிடுவது நல்லதா?

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மாங்காய் சீசனும் ஆரம்பித்துவிட்டது. மாங்காய்களில் பல வகைகள் உண்டு. அதில் அல்போன்சா, அம்ரபாலி, பங்கன பள்ளி, ருமானி உள்ளிட்ட மாம்பழங்கள் சுவை அதிகமாக இருக்கும் என்பதால் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகின்றன.

கோடை காலங்களில் பொதுவாக வீடுகளில் இருக்கும் போது மாங்காயில் உப்பு, மிளகாய் போட்டு சாப்பிடும் பழக்கம் பரவலாக இருக்கிறது.

இதில் ஆரோக்கிய நன்மைகளும் கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில் மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம். 

❇️ சர்க்கரை அளவு குறைவு

மற்றைய பழங்களுடன் ஒப்பிடும் போது மாங்காயில் சர்க்கரை அதிகம் குறைவாக இருக்கிறது.

இதனால் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பச்சை மாங்காயை எடுத்து கொள்ளலாம். மேலும் இரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துகிறது. 

❇️ இதய நோய்.

பச்சை மாங்காயில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது சீரான ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

மேலும் இதயத்திற்கு நன்மையளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்டான மாங்கிஃபெரின் (Mangiferin) மாங்காயில் ஏராளமாக உள்ளது. இதனால் மனஅழுத்தமும் குறையும்.

❇️ ஜீரண பிரச்சினை.

மாங்காய்களில் இயல்பாக செரிமானத்திற்கு தேவையான amylases எனப்படும் செரிமான நொதிகள் இருக்கிறது.

என்சைம்கள் (amylases) காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களை மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகளாகவும் மாற்றுவதற்கு உதவியாக இருக்கிறது.

❇️கொலஸ்ட்ரால் கன்ட்ரோல்

நமது உடலில் இலகுவில் நச்சு தன்மைகள் அதிகம் இருக்கிறது. இதனை பச்சை மாங்காய்கள் நீக்குகிறது. இந்த மாங்காய்கள் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து இலகுவில் விடுபடலாம். 

❇️ எடை குறைப்பு

எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடுவது சிறந்தது.

ஏனெனின் மாங்காய்களில் ஃபேட், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கிறது.

இதிலிருக்கும் சில ஊட்டசத்துக்கள் செரிமானத்தை சீர்படுத்தி எடையை கட்டுக்குள் வைக்கிறது.

இதேபோன்று மாங்காயில் மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடுவது என்பது மேற்கூறியவற்றுக்கு உதவியாக இருக்கலாம்.

ஆனால் உடல்நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களை ஆலோசனை செய்து மாங்காயுடன் உப்பு மிளகாய் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.