எங்கும், எதிலும் கையூட்டு.

அணுகுண்டு வைத்திருக்கிறோம், உலகலாவிய உயரிய ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சி காண்கிறோம். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.

ஆனாலும்!, ‘இந்தியா கையூட்டு (லஞ்சம்) ஊழலில் திளைக்கும் நாடு என்று தான் உலகமும் பார்க்கிறது.

இந்த அவமானம் நம்மை விட்டுப் போவேனா என்கிறது...!

நமது அன்றாட வாழ்க்கையில் கையூட்டு கொடுக்காமல் ஒரு சாமானியனால் வாழவே முடியவில்லை.

கையூட்டு, ஊழல்!, எங்கு?, யாரால்?, எப்போது தொடங்கியது என்பவை விடை தேட முடியாத வினாக்கள் தான்.

ஆனால்!, அவை புற்றுநோயைப் போல பரவி, இன்றைக்கு சமூகத்தை பாதிக்கும் முக்கிய சிக்கலாக உருவெடுத்து நிற்கிறது.

சாமான்யன் தொடங்கி நாடு வரை வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக மாறி விட்டன...

ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும் ஊழல், சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடிக் கிடக்கிறது...

விண் முதல் மண் வரை கையூட்டு...!

ஆகாய விமானம் வாங்குவதில் ஊழல் என்றால் மண்ணுக்குள் அடக்கம் செய்யும் சுடுகாட்டிலும் ஊழல். சுடுகாட்டுக் கூரை போடுவதிலும் கையூட்டு...!

பொதுவாக இன்று அரசு சார்ந்த துறை அலுவலகங்கள் , அரசுச் சான்றிதழ் வழங்கும் இடங்கள்,மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கம், விமானம் என்று கையூட்டு அனைத்திலும் பரவி உள்ளது.

எந்தத் துறை பற்றி வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே போனாலும் அங்கெல்லாம் கையூட்டு செயல்களைக் கண்டு அதிர்ந்து விடுகிறோம். இதை அன்றாட வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு விட்டோம் நாம்...            "முன்பெல்லாம் கடமையை மீறுவதற்குத் தான் கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. 

வெளிநாடுகளில் கையூட்டு யாரும் வாங்கவில்லை என்று கூட கூறவில்லை, வாங்குகிறார்கள்!. அவர்கள் எல்லோரும் தங்கள் பணியை மீறுவதற்கு கையூட்டு வாங்குகிறார்கள் . 

ஆனால்!, இங்கு நம்மில் பலரோ  நமது பணிகளை செய்வதற்கு கையூட்டு வாங்குகிறார்கள்.இது தான் நூற்றுக்கு நூறு உண்மை... சமீபத்தில் நீதியரசர் அய்யா புகழேந்தி அவர்கள் ஒரு பொது நிகழ்வில் பேசும் போது 'தமிழ்நாட்டில் இலஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது என்றும், இளைஞர்கள் அதிகளவில் மது போதைக்கு அடிமையாகி வருகிறார்கள் என்று தன் வேதனையை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

அதனால் தான் இன்னும் அடிப்படை தேவைகளுக்குக் கூட கையேந்தும் நிலை நமது நாட்டில் .

இந்த நிலை இன்னும் நீடித்தால் உலக அரங்கில் நமது நாடு மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கிறதோ!, இல்லையோ!, அதற்கு முன்பாக கையூட்டு வாங்குவதில் முதல் இடம் பிடித்து விடும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிப் போகலாம்.

சமூகத்தில் அடி ஆழம் வரை ஊடுருவிய ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், ஒரு நாளில் சாத்தியம் இல்லை.

அதற்கான முன்னெடுப்புகளை தனிநபர்கள் தொடங்கி, அரசாங்கம் வரை இணைந்து செயல்படுத்தினால் தான் சாத்தியம்".

ஆம் நண்பர்களே...!

🟡 அதிகாரத்தால் மட்டும் ஊழல் நடப்பதில்லை. ஊழலற்ற நாடாக மாற வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாற வேண்டும். அதுதான் அடிப்படை...!

🔴 எந்தவொரு பணிக்கும் கையூட்டு கொடுக்க மாட்டோம். வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்...!

கையூட்டு பெறாமல் தன் பணியில் நேர்மையை கடைப்பிடிக்கும் அலுவலர்,, அதிகாரிகளை இனம் கண்டு அவர்களைப் பாராட்ட வேண்டும்.

⚫ அதிகாரிகள் கட்டுப்படுத்தும் ஊழலற்ற அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்...!!!

🔘 தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க மாட்டோம் என்றும் உறுதியுடன் நாம் செயல்பட்டால் கையூட்டு, ஊழலை ஓரளவாது ஒழிக்கலாம்...

வாருங்கள்...!

புதிய உலகம் காண்போம்...!

கையூட்டு அறவே அற்ற ஒளி உலகம் காண்போம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.