முதுமையை நேசியுங்கள்.

முதுமை வந்து விட்டதே!, என வருந்த வேண்டாம். முதுமைப் பருவம் தவிர்க்க முடியாது. இளமையைப் போல முதுமையையும் நேசிக்கப் பழக வேண்டும்.

முதுமையும் ஓர் அழகு. நமது ஒத்துப் போகும் குணம், மனதை இளமையுடன் வைத்துக் கொள்ளப் பழகுவது ஆகியவை முதுமையைக் கடக்க எளிதான வழிகளாகும்..

முதுமையில் ஏற்படும் களைப்பை, நோய்களை, உடல் வலிகளை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

உடல்நிலை எதற்குத் தகுதியோ அதை மட்டும் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

பேரக்குழந்தைகளுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் குறும்புகளை அனுபவிக்க வேண்டும். ஆனால்!, முழு நேரக் காப்பாளராக இருக்கக் கூடாது...

மகள் அல்லது  மகன் பொறுப்பில் அவர்கள் வளர்க்கட்டும், அவர்களிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிட வேண்டும்...

மக்கள் கூட்டம், அக்கம்பக்கத்தார் , நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்கள் கூட்டத்தை அதிகரித்து அவர்களுடன் மகிழ்வுடன் இணைந்து இருக்க வேண்டும்...

தன்னை ஒரு சுமையாக கருதிக் கொண்டு, தன்னை மற்றவர்கள் சுமையாகக் கருதும் அளவிற்கு பேசிக்கொண்டும், நாளது சிக்கல்களில் தாமும் போய் விழுந்து, அதிக சிக்கல்களாக மாறிக் கொண்டும் இருந்தால், உறுதியாக அமைதியே கிடைக்காது...

ஆம்!, அன்பு மூத்த குடிமக்களே...!

🟡 முதுமை வரும் பொழுது மனதைத் தான் பக்குவப்படுத்தி மகிழ்ச்சி பெறத் தெரிய வேண்டும். அதுதான் இளமையாக இருப்பதின் மறைபொருளாகும்...!

🔴 இவ்வளவு நாள் சேமித்ததை நல்ல முறையில் செலவிடுங்கள். உங்கள் உடல் நிலை, பொருளாதார வசதி ஒத்துழைத்தால் இதுவரை சென்று வர இயலாத இடங்களுக்கு குடும்பத்துடன்  சென்று வாருங்கள்...!!

🔴 கடந்த கால நினைவுகளை எண்ணாமல் நிகழ்காலத்திற்கு வாருங்கள். நேற்றைய நினைவுகளோ, நாளைய கவலைகளோ தேவையற்றவை. நேற்று என்பது முடிந்து போனது. நாளை என்பது வராமலேயே கூடப் போகலாம். உங்களையும் மற்றவர்களையும் மன்னித்து விடுங்கள்...!!

⚫ உங்களால் பிறருக்கு ஏதேனும் இடர் ஏற்பட்டிருந்தால் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள். குடியொன்றும் முழுகிப் போவது இல்லை. இறுதியாக வாழ்வின் சுழற்சியில் மரணமும் ஒன்று. அமைதியோடு அஞ்சாமல் இருங்கள்...!!!

⚫ இந்த வாழ்வை விடச் சிறந்த வாழ்வின் திறவுகோல் தான் மரணம். செல்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள். முதுமையை வென்று இளமையாக வாழ்வோம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.