கற்பனைகள் என்னும் அற்புதங்கள்.

உருண்டு ஓடிய கற்களைப் பார்த்து இதன் மேல் நாம் அமர்ந்து சென்றால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை தான் சக்கரங்களும் அதன்பின் வண்டிகள் உருவாகக் காரணமாக அமைந்தது. 

இப்போது சொகுசு வாகனங்களாக வளர்ச்சி பெற்றும் உள்ளது. 

 பறவையைப் போல நாம் பறந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை தான் விமானங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. 

இப்படியான அனைத்து கண்டுபிடிப்புகளின் அடிப்படையே கற்பனைகள் தான். 

அதுபோலவே, நான் இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஒருவரால் கற்பனை செய்ய முடியுமெனில் அப்படியெல்லாம் அவர் வாழவும் சாத்தியம் உண்டு. 

அது அவருடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அவருடைய செயலின் அளவைப் பொறுத்து அவர் விரும்பும் வாழ்க்கையின் அளவும் அமைகிறது. 

நல்ல எண்ணங்கள், நல்ல உணர்வுகள் மற்றும் நல்ல நோக்கத்துடனும் நாம் செயல்படுகிறோம் எனில், நம் வாழ்க்கை நிச்சயமாக அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையாக அமையும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை. 

அப்படியொரு அற்புதமான வாழ்க்கை அனைத்து நீங்களும் வாழ வேண்டுமென விரும்பினால், 

அந்த அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையை முதலில் உங்கள் கற்பனையில் இருந்து தொடங்குங்கள். உங்கள் கற்பனைகள் விரைவில் உண்மையாக மாற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.