நிம்மதி

மனதில் நிம்மதி உடையவன், எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கிறான்.

📌 நிம்மதி எப்படி கெடு்கிறது?

பொதுவாக, இந்த உலகத்தில் நாம் பலருடன் பழகுவதினாலேயே நமக்கு நிம்மதி கெடு்கிறது.

நிம்மதி கெடுவதற்கு காரணம், நாம் பழகும் மனிதனோ, மிருகமோ ஏதுவாக இருந்தாலும் அதில் உள்ள குறைகளே காரணம்.

அந்த குறைகளை, நாம் அறியும் போது, நமக்கு நிம்மதி கெடுகிறது. மற்றவர் குறையால், இழப்பது நம் நிம்மதியை தான்.

சிறிது நாள் பழகினாலேயே, நமக்கு மற்றவர்களின் குறைகள் தெரிய ஆரம்பிக்கிறது. இதுவே கடைசியில் நம் நிம்மதியை கெடுக்கிறது.

கணவன், மனைவி இடையே கூட இந்த குறைகளே, இருவருக்கும் இருந்த நிம்மதியை கெடுக்கிறது.

மாமியார் தன் மருமகளின் குறைகளை கண்டுபிடித்தே, இருந்த நிம்மதியை தானும் கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

இதேபோல மருமகள், மாமியார் குறைகளை கண்டு பிடித்து, இருந்த நிம்மதியை கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

வீட்டிலே உள்ளவர்களின் குறையே, நம் நிம்மதியை கெடுக்கும் என்றால், வெளி மனிதர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்த உலகில் பல மனிதர்கள். அவரவர்களுக்கு பல ஸ்வபாவம், பல நம்பிக்கை உள்ளது.

இப்படி பலருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில், இவர்களிடம் உள்ள குறைகள், நம் நிம்மதியை அழித்தே விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள 2 வழிகள் :

1. தனிமையில் எப்போதும் இருக்க முயற்சி செய்தால், பிறர் குறை தெரிய வாய்ப்பு இல்லை. இதுவே நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி. 

இதில் ஒரு குறைபாடு உள்ளது. தனிமையில் இருக்கும் போதும், மனம் அடங்காமல் இருப்பதால், மனம் தன்னிடம் உள்ள குறையை எடுத்துக் காட்டும். மற்றவர் மீது பார்த்த குறையை விட, தன்னிடம் பார்க்கும் குறைகள் இன்னும் நிம்மதியை கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

2. மகான்கள் மற்றும் குருவின் வழி : குருவுக்கு பல சிஷ்யர்கள் உண்டு. குரு உலகப் பற்று இல்லாமல் இருந்தாலும், நம்மை போன்றவர்களை வாழ்வில் உயர்த்த நம் வரை வந்து சகஜமாக பேசுகின்றனர். 

நாம் பேசும் கீழ் தரமான பேச்சுக்கள், செய்யும் செயல்கள் அனைத்துமே அவருக்கு குறைகளாக இருந்தும், 

1000 குறைகள் இருந்தாலும், அதில் எங்காவது ஒளிந்திருக்கும் 1 நல்ல குணத்தை கண்டுபிடித்து, அதை மட்டுமே பெரிதுப்படுத்தி குறை உள்ளவனிடமும், புன்முறுவலோடு பேசுகிறார். 

இந்த முறையினால், மகான்கள் லட்சம் பேரிடம் பழகும் போதும், தன் நிம்மதியை கெடுத்துக் கொள்வதில்லை.

கலி புருஷன் "இந்த கலி யுகத்தில், நான் அதர்மத்தை நிலை நிறுத்தி, கலியின் கொடுமையை மக்களுக்கு காட்டுவேன்." என்று சொல்லி, 

மேலும், "எங்கே "ஹரி"யின் நாமம் கேட்கிறதோ அங்கு இந்த கலியின் கொடுமை இருக்காது, தர்மம் நிலைக்கும், மக்கள் அவதிப்பட மாட்டார்கள்" என்று சொன்னான்.

இதனை கேட்ட அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், பரீட்சித்து மன்னன், பல இன்னல்களை மக்கள் இந்த கலியுகத்தில் அனுபவிக்க நேரிடுமே என்று ஒரு கவலையினால், 

தன் நிம்மதி கெட வாய்ப்பு இருந்தும், கலி புருஷன் "ஹரி" நாமம் சொன்னால் பாதிப்பில்லை என்று சொன்னது மட்டும் பெரிதாகப் பட்டது.

கலி புருஷனிடமும் ஒரு நல்ல குணத்தை பார்த்தார் பரீட்சித்து.

நிம்மதி கெடாமல் இருப்பதற்கு, ஓடி ஒளிவதை விட, மற்றவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் பார்ப்பதே சரியான வழி.

தீய குணத்தை பார்ப்பதால், நம் நிம்மதியும் கெடும், பகையும் வளரும்.

இருக்கும் ஒரு நல்ல குணத்தை பார்ப்பதால் கூட, நம் நிம்மதி நம்மிடமே இருக்கும். மேலும் குறை உள்ளவனும், இதனால் மேலும் பல நல்ல குணங்களை காலம் செல்ல செல்ல வளர்த்துக் கொள்வான்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.