ஒரே ஒரு மாதம் சர்க்கரை தவிர்த்தால். நிகழும் அற்புதம்!

அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை சாப்பிடுவதால் என்னென்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுத்தும்.

சாக்லேட், பிஸ்கட் மற்றும் பிற தின்பண்டங்களையாவது தவிர்த்து விடலாம். ஆனால் காபி மற்றும் டீயில் பாதியளவு சர்க்கரையாவது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.

ஆனால் சர்க்கரையை முழுவதுமாக தவிர்ப்பது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்க உதவும். இது சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறைத்து நமது ஆற்றல் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.

❇️சர்க்கரை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

📌உடல் எடை இழப்பு

சர்க்கரை நமது கலோரி அளவுகளை அதிகரிக்க கூடிய ஒரு பொருளாகும். இதனை தவிர்த்து விடுவது உங்களுக்கு எடை இழப்பை ஏற்படுத்தும்.

ஆகவே நீங்கள் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் அதனை முழுவதுமாக நிறுத்தி விடுவது உங்களுக்கு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

📌அதிக ஆற்றல்

நமது ஆற்றல் அளவை அதிகரிக்க சர்க்கரை சாராத உணவுகளை நாம் எடுக்கும்போது, நமக்கு நாள் முழுவதும் போதுமான ஆற்றல் கிடைக்கிறது.

📌சொத்தைப்பல்

சொத்தைப்பல் ஏற்படுவதற்கு சர்க்கரை ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே சர்க்கரையை அகற்றி விடுவது நமது வாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும்.

📌சரும ஆரோக்கியம்

சர்க்கரையை தவிர்ப்பது தெளிவான சருமத்தையும், முகப்பருவையும் குறைக்கும் என கூறப்படுகிறது.

📌கொழுப்பைகுறைக்கும்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த கொழுப்பானது இரத்தத்தில் டிரைகிளிசரைடு வடிவில் காணப்படுகிறது. அன்றாட சர்க்கரை அளவை குறைப்பது கலோரிகளை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.             

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.