உடல் எடையை குறைக்க இந்த விதைகள் உதவுமா

உடல் எடையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது.

உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும்.

எடை அதிகரிப்பதற்கு உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது.

எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.

❇️விரைவான எடை இழப்புக்கான விதைகள்

உடல் எடையை குறைக்க பல உணவுகள் மற்றும் பானங்கள் உதவும். உதாரணமாக பானங்களில், புரோட்டீன் ஷேக்குகள், ஸ்மூதிகள், பழச்சாறுகள், தேநீர் போன்றவை உடல் எடையைக் குறைக்க பல வழிகளில் பயன் தரும் என கூறப்படுகின்றது.

பல பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகளில் வைட்டமின்கள், ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் எடை இழப்புக்கு உதவும் பிற கலவைகள் நிறைந்துள்ளன.

ஒருவரது உடல் எடை அதிகரித்தால் அது அவரது தன்னம்பிக்கையையும் பாதிக்கின்றது. இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு தொங்கும் நிலையில் இருக்கும் தொப்பை போன்றவை நமது தோற்றத்தையே கெடுத்து விடுகின்றன.

கூடுதலாக இவை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானவை. ஜங்க் ஃபுட், பொரித்த உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சில குறிப்பிட்ட உணவுகளை நமது தினசரி டயட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

எடை குறைப்பு உணவுகளில் விதைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. சில விதைகளை உட்கொள்வதால் சில நாட்களின் நமது உடல் எடை குறைந்துவிடும்.

தொப்பை கொழுப்பும் மறைந்துவிடும். அத்தகைய விதைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

❇️விரைவான எடை இழப்புக்கான விதைகள்

📌சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் அதிக அளவு புரதம் உள்ளது. காலை உணவில் சியா விதைகளை உட்கொண்டால், வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.

இதன் காரணமாக நாம் கூடுதலாக சாப்பிடுவதையும், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.

மறுபுறம், சியா விதைகள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.

📌ஆளி விதைகள்

ஆளி விதைகளில் அதிக நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

ஆகையால் ஆளி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

இதற்கு ஆளி விதைகளை காய்கறி, தயிர், பராத்தா ஆகியவற்றில் சேர்க்கலாம் அல்லது ஸ்மூத்தியாக உட்கொள்ளலாம்.

📌சூரியகாந்தி விதைகள்

எடை இழப்பு என்று வரும்போது, ​​சூரியகாந்தி விதைகளை விட சிறந்தது எதுவுமில்லை.

சூரியகாந்தி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கொழுப்பை எரிப்பது எளிதாகும்.

இதனுடன் இது குடல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

சூரியகாந்தி விதைகளை உங்கள் உணவில் சூப், டீ அல்லது ஏதேனும் பானமாக எடுத்துக் கொள்ளலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.