நிம்மதி இழப்பது எதனால்...?

''தன்னிடம் இருப்பதே போதும்...!'' என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் மனநிறைவு,, நிம்மதி அடைவது இல்லை...

நம்மிடம் இருப்பதைக் கொண்டு மனநிறைவு காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும் போதாது தான்...!

ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து, ''அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை, என்ன காரணம் என்பது புரியவில்லை...!?" என்று கேட்டார்...

அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை. அங்கே அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார். அதன் கையில் ஒரு மாம்பழத்தைக் கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது...

அடுத்து ஒரு பழத்தைக் கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது. மீண்டும் ஒரு பழத்தைக் கொடுத்தார். தன்னுடைய ஒருகையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது. ஆனால்!, ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக் கண்டு அந்தக் குழந்தை அழுதது...

இதை கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பணக்காரரிடம் அந்த அறிஞர்,

"இந்தக் குழந்தையைப் பார்த்தாயா...? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா...?" என்றார்...

அதே போன்று தான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் சிக்கல் வாரது. நிம்மதி கிடைக்கும். தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்தப் பணக்காரருக்குப் புரிந்து விட்டது...

ஆம் நண்பர்களே...!

🔴 நமது முன்னோர்கள் கூறிய மொழி ஒன்று "இருப்பதை விட்டு, இல்லாததற்கு பறக்காதே என்று." நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் போது நாம் நிம்மதியை இழக்கக் கூடிய சூழல் உருவாகிறது...!

⚫ எனவே!, நம்மிடம்  உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.