சும்மா' இருப்பது.

'சும்மா இரு'',சும்மா சொல்கிறான், அவன் அங்கு போகவில்லை என்று 'சும்மா' சொல்கிறான், அவன் எப்போதும் 'சும்மா' தூங்கிக் கொண்டேயிருக்கிறான்.உங்களை 'சும்மா' பார்க்க வந்தேன். என்று சொல்வது நம்மிடையே  காணப்படும் ஒரு பொதுவழக்காகும். 

வேலையில்லாதவர்களையும், பணி ஓய்வு பெற்றுள்ள முதியோர்களையும் நோக்கி, 

"இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

என்று கேட்கும் போது"சும்மா தான் இருக்கின்றேன்!" என்று அவர்கள் விடையளிப்பதுண்டு.

'சும்மா இருப்பதும்' ஒருவகையில் சுகம் தானே!

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்தக் கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு நாள் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் .கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்குப் பார்த்துக் கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".என்று தினசரி செலவு பட்டியலில் எழுதப்பட்டிருந்தது.

அதைப் பார்த்த அவர், " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? 

அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் :

"ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை

எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார். வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும் தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முயன்று பார்த்தார் .

மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முயன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது .

கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது .

மகளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டும் , மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கைத் தொடுகிறது . கண்விழித்துப் பார்க்கிறார் மனைவி கொண்டு வந்து வைத்து விட்டுப் போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்

"மனம் - தியானம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில் தான் தியானம் ஆரம்பமாகிறது.

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல்படுகின்ற வரையில் தியானமும் ஆரம்பமாவதில்லை "அதிகாரி திணறிப் போனார் .

அவருக்கு ஊழியர்கள் கட்டுப்படுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலை பாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். 

" சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குப் புரிந்தது. உடனே மறுபடியும் புறப்பட்டு அந்தக் கோவிலுக்குப் போனார், 

பதிவேட்டைக் கொண்டு வரச் சொன்னார். அதில் இப்படி எழுதினார் : சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டைச் சோறு !"

ஆம்.,நண்பர்களே.,

''சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது...

மனம்.. நடந்து முடிந்து போன செயலுக்கும்,, இனி நடக்கப் போகிற செயலுக்கும் குழப்பமடையாமல் வெறுமனமே இருப்பதே 'சும்மா' இருப்பது''..

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.