மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் உளுந்தங்களி!

உளுந்தங்களி சாப்பிடுவதால் நம் உடலிற்கு தேவையான அனைத்து ஊட்டசத்துகளும் கிடைக்கின்றது.

உளுந்தில் புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துகள் அதிகம் உள்ளன.

மேலும் எலும்பானது வலுப்பெற உளுந்து சாப்பிடுதல் மிகவும் நல்லது. ஆகவே வீட்டில் இருந்தவாறே எப்படி சுவையான ஒரு உளுந்தங்களி செய்யலாம் என் தெரிந்துக்கொள்வோம்.

📌தேவையான பொருட்கள்

👉அரைத்த உளுந்து மா - 04 கை அளவு

👉கருப்பட்டி - 100 கிராம்

👉தேங்காய் துருவியது - 03 தே.கரண்டி

👉நல்லெண்ணெய் - 09 தே.கரண்டி

👉அரிசி மா - 04 தே.கரண்டி 

📌செய்முறை

முதலில் கருப்பட்டியை தேவையானளவு தண்ணீர் சேர்த்து கரைத்து எடுக்க வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் உளுந்து மாவு மற்றும் அரிசி மா சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின் அந்த கரைசலை உப்புமா செய்வது போன்று 5நிமிடம் நல்லெண்ணெய் விட்டு கலந்துக்கொள்ள வேண்டும்.

துருவிய தேங்காய் துருவல் மற்றும் கரைத்து வைத்த கருப்பட்டியை சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான உளுந்தங்களி ரெடி.

📌இது சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள்

👉முதுகு வலி, இடுப்பு வலி இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.

👉பெண்களுக்கு கர்ப்பபை மிகவும் வலுப்பெறும்.

👉சிறுநீரக கோளாறு சீராகும்.

👉நீரழிவு நோய் தீரும்.

👉ஆண்மை குறைபாடு நீங்கும்.

👉தலைமுடி உதிர்தல் சரியாகும்.

👉இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

👉செரிமானத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

👉கல்லீரல் செயற்பாட்டிற்கு உதவும்.

👉மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் தரும்.

👉உடல் சூடு தணியும். 

மேலும் சைனஸ் நோய் இருப்பவர்கள் வெல்லக் கரைசலுடன் சுக்குப் பொடியை சேர்த்து களி தயார் செய்யலாம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.