எறும்பை விட.

கொஞ்சம் சர்க்கரையும் (ஜீனி ) உப்பும் கலந்து ஒரு எறும்பு கூட்டத்தின் முன் போடுங்கள்.

  சர்க்கரையும் சால்ட்டும் வெண்மையாக பார்க்க ஒன்று போலவே இருக்கிறது. ஆனால் எந்த எறும்பும் சர்க்கரைக்கு பதிலாய் உப்பை தூக்கி போவதில்லை.

சர்க்கரையை விட உப்பு சின்னதாய் தூக்கி செல்ல எளிதாக இருக்கிறது என்று அதை எடுத்து செல்வதில்லை. சிரமமாக இருந்தாலும் சர்க்கரையை மட்டுமே சுமந்து செல்கின்றன.

   நீங்கள் எத்தனை முறை எத்தனை எறும்புகளிடம் முயற்சித்தாலும் ஒரு எறும்பு கூட தவறு செய்வதில்லை.

  எது தேவை எது தேவை யில்லை என்பது அதன் இயல்பிலேயே இருக்கிறது. ஒரு சின்ன எறும்புக்கு கூட தான் செய்ய வேண்டிய செயல் எது என்று நன்கு தெரிகிறது.

  ஒரு எறும்புக்கு கொடுத்ததை  விட அதிகமாகவே ஆற்றலும் அறிவும் நமக்கு அளித்துள்ளான் இறைவன்.

  அதன் பின்பும் நாம் தவறான செயல்களையே செய்கிறோம். நமக்கு அவசியமா ன செயல்களை செய்வதை விட நமக்கு எளிதாக உள்ள செயல்களையே செய்ய முற்படுகிறோம்.

  இதற்கு முழு காரணம் நமது நான் என்கிற அகங்காரம் தான். அகங்காரத்தின் சொல்லை மீறி புத்தியின் சொல்படி நடந்தால் நல்லது.

    சீனி கூட உப்ப கலந்து போட்டுட்டானே இவன் உருப்படுவானா! என்ற எந்த புலம்பலும் இன்றி இருப்பதில் இருந்து தனக்கு ஏற்றவற்றை தேர்வு செய்து எந்த புகாரும் இன்றி அனைத்தையும் ஏற்று வாழ்ந்து வருகிறது எறும்பு.

   மனிதனை தவிர மற்ற உயிர்கள் அனைத்துமே அப்படித் தான்.இறைவன் தருவ தை அப்படியே மனப் பூர்வமாக  ஏற்றுக் கொள்கின்றன.

   ஆனால் மனித மனம் மட்டுமே ஆணவத்தில் எல்லாம் எனக்கு தெரியும் என்று அந்த படைப்ப வனையே ஏமாற்றத் துடிக்கிறான்.

  இங்கு அனைத்துமே இறைவன் வழங்கியது தான். இந்த கணம் நீங்கள் செய்ய வேண்டிய செயல் என்ன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

   எல்லோருக்குமே அந்த அறிவு இயல்பிலேயே இருக்கிறது. நாம் செய்ய வேண் டிய சரியான செயலை செய்யாமல் தெரிந்தே தவறான செயல்களை செய்கி றோம்.

  பின்னர் அதன் பின் விளைவுகளை எதிர்  கொள்ள திராணியின்றி பழியை பிறர் மீது சுமத்தி நம்மை சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.

  நமது துன்பங்கள் அனைத்திற்கும் நாம் மட்டுமே காரணம்.

   இங்கு அனைத்துமே அவனது பிளான் படி ஒழுங்காகவே நடந்து கொண்டு இருக்கிறது. நம்மால் அதை மாற்ற முடியாது.

 ஒவ்வொரு கணமும் நாம் செய்ய வேண்டிய செயலை உணர்ந்து அதை சிறப்பாக செய்தால் போதும்.

 இதை நான் ஏன் செய்ய வேண்டும்?.இதனால் எனக்கு என்ன லாபம்? என்று நாம் நமது அகங்காரத்தின் படி செயல் செய்ய முயற்சித்தால் துன்பம் தொடர்வதை தவிர்க்க இயலாது.

நன்றி காரியாண்டி கணேஷ்.

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.