உங்களை நம்புங்கள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தன்னை நம்புதலாகும், ஒரு வாகனத்தை, ஒரு புகைவண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தித் தள்ளி விடுகிறதல்லவா...!

அதுபோல மனித சக்தி நம்மில் நிறைந்திருந்து இருந்தால் தான் அது முன்னேற்றப் பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும், சிறிதளவேணும் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இயற்கையிலே நாம் நம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.

அது போதுமான அளவு சிலருக்கு இருப்பதில்லை, அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக் கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம்.

முழுவதுமாக நிரம்பப் பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டு செல்லும்..

🔹உங்கள் வலுக்குறைவை (பலவீனம்) விட வலுவை அதிகப்படுத்துங்கள்.

🔹சோம்பல்களை விடுத்து உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள்.

🔹அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள்..

🔹எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள்.

இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும் போது உங்கள் மீது நம்பிக்கையும் அதிகரிக்கும்.

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ்மனதின் வல்லமையைத் தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற செயல்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எத்தனைத் தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பது தான் இழிவு'.

எனவே..

🔹விழித்துக் கொள்ளுங்கள்...!

🔹வெற்றியை நோக்கி விரைந்திடுங்கள்.

🔹சற்றும் தாமதிக்காதீர்கள் என்று ஆழ்மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

🔹உங்கள் குறிக்கோள்களையும் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள்...

ஆம் நண்பர்களே...!

🟡 தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வையுங்கள்...!

🔴 உங்கள் கண் முன்னே தெரிவதெல்லாம் வெற்றிப் படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றிப் படிகளில் பயணியுங்கள்...!!

⚫ மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள், இனி நாளைய காலம் என்றும் நம்மோடு தான்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.