முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில், நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது.

உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்தி,பல வியாதிகளை தடுக்கும் சிகிச்சைக்காகவும் முள்ளங்கி பயன்படுகிறது.

முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.

முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.

முள்ளங்கி, முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.

இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

இந்த முள்ளங்கியால் வாத நோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.

சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் எளிதாக பிரியும். இதனால் ஏற்படும் கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.

முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கருப்பு முள்ளங்கி மற்றும் முள்ளங்கி இலைகள் இந்த மஞ்சள் காமாலை சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

முள்ளங்கி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் நன்றாக செரிமானம் ஆகிறது. முள்ளங்கி மூல வியாதியின் அறிகுறிகளை விரைவில் போக்குகிறது.

முள்ளங்கி சாப்பிட்டால் உங்கள் கலோரி எண்ணிக்கையை நிறைவு செய்து எளிதில் பசியை நிறைவு செய்கிறது. முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடையை இழக்கச் செய்கிறது.

முள்ளங்கியில் அந்தொசியனின்கள் இருப்பதால் இருதய நோய்களை குறைக்கின்றன.

முள்ளங்கியில் வைட்டமின்-சி, போலிக் அமிலம் மற்றும் அந்தொசியனின்கள் நிறைந்து இருப்பதால் பெருங்குடல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் சிகிச்சைக்கு இது பயன்படுகிறது.

முள்ளங்கியில் உள்ள கார்சினோஜனிக் எதிப்பு பண்புகள் இருப்பதால் வெண்நோய் சிகிச்சைக்கு பயனுள்ளதாக உள்ளது.

முள்ளங்கியில் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளை எளிதில் தீர்க்கிறது. மேலும் இது தளர்வான குடலை உறுதிபடுத்துவதற்கு உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றிற்கு உதவுகிறது.

இத்தகைய அதி அற்புதமான முள்ளங்கியினை,உணவில் அதிகம் சேர்த்து அதன் அளவற்ற பலன்களை பெற்று பயன் பெறுவோம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.