செயலே பிரதானம்.

நீங்கள் மிகப் பெரிய கோடீஸ்வரராய் இருக்கலாம்.ஒருவேளை மிகுந்த வறுமை யில் வாடும் நபராகவும் இருக்கலாம்.

   சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராய் இருக்கலாம். இல்லை  யாராலும் சீந்தப் படாது செல்லாக் காசாகவும் இருக்கலாம்.

   அதிகாரம் மிக்க பதவியிலும் இருக்கலாம் அல்லது  அடிமை வாழ்வு வாழும் கீழ் மட்ட ஊழியனாகக் கூட இருக்கலாம்.

  நீங்கள் எதுவாக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அதற்காக கவலை பட வேண்டியதில்லை.

  இதற்கு காரணம் நீங்கள் இல்லை. இது எதுவும் நிரந்தரமும் இல்லை. ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகும் சினிமா போல இங்கும் ஏதும் நடக்கலாம்.

  இன்று இந்த கொரோனா சாம்ராஜ்ஜியத்தில் எத்தனையோ தொழில் அதிபர் கள் வீதிக்கு வந்து விட்டார்கள்.

  இது எல்லாமே நாடகத்தின் காட்சிகள். எந்த நேரத்தில் எப்படி சூழ்நிலை என்ற சீன் மாறும் என்பது படைத்தவனுக்கு மட்டுமே தெரியும்.

  இதை மாற்ற நாம் போராடி எந்த பிரயோசனமும் இல்லை. நம்மால் ஏதும் இயலாது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  அப்படீன்னா நான் என்ன தான் பண்றது என்றால், நீங்கள் செய்வதற்கு செயல் கள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

   வயதான பெற்றோர்களை பாதுகாப்பது, மனைவி குழந்தைகளை வாழ வைப்பது என்று நமக்கு கடமைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

  அனைவருமே அவரவர் கடமைகளை செய்து தான் ஆக வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.

  அந்த அனுபவங்கள் தரும் அறிவின் மூலம் உங்கள் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்வின் நோக்கமே அது தான்.

  அனலில் இடப்பட்ட தங்கத்தை போல இந்த வாழ்கை அனுபவங்கள் நம்மை புடம் போட்டு நம் மாசுக்களை எரித்து நம்மை தக தக வென மின்னச் செய்கி றது.

  நீங்கள் தேனீயாக இருந்தால் தேனை சேகரிக்க சுறுசுறுப்பாய் பறந்து திரியத் தான் வேண்டும்.

  அப்படி நீங்கள் பாடுபட்டு சேகரித்த தேனை ஒரே நாளில் யாரோ ஒரு மனிதன் மொத்தமாய் திருடி செல்லலாம்.

  அதற்கு நீங்கள் எந்த எதிர் வினையும் ஆற்ற முடியாது. நீங்கள் மீண்டும் மலர் களை நாடி தேனை சேகரித்து தான் ஆக வேண்டும்.

  நீங்கள் கொசுவாக பிறந்திருந்தால் அந்த மனிதனின் ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழலாம்.

  அதே சமயம் அவனிடம் அடி  பட்டு கபாலம் சிதறி மோட்ச பதவி அடையவும் வாய்ப்பு இருக்கிறது.

  வாழ்கை என்பது எப்போதும் ரிஸ்க் நிறைந்தது தான். அதை ரஸ்க் சாப்பிடுவது போல அனுபவிக்க பழகிக் கொள்ள வேண்டியது தான்.

  ஆனால் எந்த இடரிலும் செயல் செய்வதை தவிர்க்க கூடாது. செய்ய வேண்டிய செயலை செய்தே ஆக வேண்டும்.

  காலம் கருதாது கடமையை செய்யுங்கள்.நாம் செய்ய வேண்டிய பணி அது ஒன்றே.

  இந்த உலகில் நாம் உயிர் வாழும் வரை நாம் நமது கடமையை தொய்வின்றி தொடர்ந்து செய்ய வேண்டும்.

  அதாவது செயல் செய்வதை தவிர நமக்கு இந்த உலகில் வேறு எந்த கடமையும் இல்லை.

 தேவையற்ற கனவுகள் கண்டு காலத்தை வீணாக்காமல் செய்ய வேண்டிய செயல் களை சிறப்பாக செய்ய முயல வேண்டும்.

By காரியாண்டி கணேஷ்.

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்போதும் 

 நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

 இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.