இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள்!

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்றாலே முதலில் நம் நியாபகத்திற்கு வருவது பேரீச்சம்பழமும், கீரையும்தான்.

இரும்புச்சத்து நம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு ரத்தத்தில் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கும். அதோடு அனீமியா என்னும் ரத்த சோகையைத் தீர்க்கவும் உதவுகிறது.

பேரீட்சைப்பழம் மற்றும் கீரையை தவிர வேறு சில இரும்புச்சத்து உள்ள உணவுகளை பற்றி பார்ப்போம்.

✅பயறு வகைகள்

பருப்பு மற்றும் பயிறு வகைகளில் புரதங்கள் இருப்பதை தாண்டி அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளது.

இரும்புச்சத்துடன் புரதமும் இணையும்போது உடல் வலுவடையும், தசை வளர்ச்சி கூடும்.மேலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

✅சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதோடு இரும்புச்சத்தும் அதிகமாகவே இருக்கிறது.

இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமலும் தடுக்கிறது.

✅முந்திரி

முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதோடு இரும்புச்சத்தும் அதிகளவு உள்ளது.

இரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் 4 முந்திரி பருப்பை காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.

✅கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்து மிகுந்துள்ளன. இதில் புரதங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றோடு இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக்கடலையை சாப்பிடக் கொடுத்தால் ரத்த சோகை வராமல் தடுக்கும். மேலும் அவர்களின் தசை வளர்ச்சியும் மேம்படும்.

✅பூசணி விதை

பூணிக்கையின் விதையில் புரதங்கள், வைட்டமின்கள் இருப்பதோடு அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளன.

பூசணிக்காயை விதையை வறுத்து ஸ்னாக்ஸ் போலவும் உண்ணலாம்.மேலும் விதையை பொடித்து சூப் செய்தும் சாப்பிடலாம்

✅டார்க் சாக்லேட்

டார்க் சாக்லெட்டில் காஃபைன் மற்றும் இரும்புச்சத்தும் இருக்கிறது. இது மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

இவை அதிகளவில் உட்கொள்ளாமல் தினமும் சிறு துண்டு என குழந்தைகளும் பெண்களும் உண்ணுவது நல்லது.

✅கோழிக்கறி

கோழியின் மார்புப்பகுதியில் புரதங்கள் அதிகளவு உள்ளது என்பார்கள்.அதேபோல் கோழியின் தொடைப்பகுதியில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளதாம்.

எனவே சிக்கன் வாரத்துக்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வது தசை வலிமையைக் கூட்டம்.மேலும் அனீமியாவைத் தடுக்கவும் உதவும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.