நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்..

ஒரு பலா விதையை விதைத்து அதிலிருந்து மா மரத்தை ஒருவன் எதிர்பார்க்கலாம் அதற்காக கடினமாக உழைக்கலாம்

ஆனால் அங்கு அவன் என்னதான் போராடினாலும் நிச்சயமா ஒரு பலா விதையிலிருந்து பலாமரமே வழிபடும்.

நண்பர்களே சில நேரங்களில் வாழ்க்கை உன் கண்களுக்கு மிகப் பெரும் போராட்டமாக தென்படலாம். 

அச்சமயத்தில் உன் வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் இருக்கும் போராட்டங்கள் இருக்கும் உன் எதிர்காலம் முழுவதும் இருளாக  தென்படும் வெற்றி மீது உனக்கு துளிகூட நம்பிக்கை இருக்காது. 

இவ்வாறு உன் வாழ்க்கை முழுவதும் ஓர் குழப்பமாக வாழும்போதே நீ ஒன்றை நினைவில் கொள்..

இவ்வுலகில் எக்காரியமும் தவறுதலாக நிகழ்வது இல்லை உன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும் அவற்றின் பின்னால் ஒரு நோக்கம் இருக்கும்

நிச்சயம் இங்கு நீ எதற்காக பிறந்தாயோ அந்த இலக்கை அடையும் வரை உன் மனம் அமைதி பெறாது 

அது உன்னை தொடர்ந்து நகர வைத்துக் கொண்டே இருக்கும்.

உன் பாதை தவறும்போது அது உனக்கு உணர்த்தும் திருப்தியில்லாமல் தத்தளிக்கும் உனக்கு வழி காட்ட முற்படும்

நிச்சயம் அது காட்டும் வழியை பின்பற்றுவதால் மட்டுமே நீ உனது உண்மையான இலக்கினை கண்டறியமுடியும்

வாழ்வில் வெற்றியடைய நீ உன்னை நம்ப வேண்டும் உனது உள்ளுணர்வுகளை நம்ப வேண்டும் அவை காட்டும் வழியிலேயே பயணிக்கவேண்டும். 

உன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகை பார் எங்கு நீ பல்வேறுபட்ட திறமைசாலி கிடைக்கும் 

வாழ்வில் மிகமிக அடிமட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்களையும் காண்பாய்

அவர்களிடம் வெற்றிக்கான ஏதோ ஒரு ரகசியம் உள்ளதாக நம்புவாய் ஆனால் உண்மை யாதெனில் வெற்றிக்கு எந்த ரகசியமும் இல்லை. 

அது இருப்பதாக நாம் தான் நம்பிக்கொண்டு அதை தேடுகின்றோம். இங்கு நாம் காணும் அனைத்து வெற்றியாளர்களும்  தங்களது உணர்வுகளை பின்பற்றினார்கள் அதை காட்டிய வழியில் பயணித்தார்கள் பயணத்தின் முடிவிலேயே அவர்களுக்கான வெற்றி இருந்தது. 

நண்பர்களே நிச்சயம் உனது விதி என்பது சில நொடிகளில் தீர்மானிக்கப்படுவதில்லை அது மாற்ற முடியாததும் அல்ல உன் வாழ்வில் நீ எடுக்கும் முடிவுகளே உன் விதியை எழுதுகின்றன.

உனது முயற்சிகளை அதே கட்டமைக்கின்றன எனவே என்றும் அவ் விதிகாக காத்திருக்காமல் அது கைகளினாலேயே எழுதிக் கொள் நீ ஒரு ஆப்பிள் மரத்தை உருவாக்க விரும்பினால் அதற்காக ஆப்பிள் விதை விதைக்க வேண்டும் அதுபோல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் அதற்கேற்ற முயற்சிகளை நிகழ்காலத்தில் நீ செய்ய வேண்டும் ஏனெனில் இங்கு நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்.

பாத்திமா நலீபா

உளவியல் எழுத்தாளர் ✍️

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.