நாட்டுச்சக்கரை மட்டுமே பயன்படுத்துங்கள் - நன்மைகள் ஏராளம்

உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் நாட்டு சர்க்கரைக்கு உண்டு.

சர்க்கரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வெள்ளை சர்க்கரையில் அதிக கலோரிகள் உள்ளன. எனவே சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருப்பதால் சர்க்கரையை சாப்பிட அனைவரும் பயப்படுவார்கள்.

சமீபத்தில் வரும் சர்க்கரை, ‘அஸ்பார்ட்டம்’ என்று சொல்லப்படுகிறது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது.

இதற்கு ஒரு நல்ல முடிவே நாட்டுச்சக்கரை தான், தேனும் நாட்டு சக்கரையும் ஒருவகை இனிப்பு மருந்தாகும்.

வெள்ளை சர்க்கரையை வெள்ளை நிறத்திற்கு கொண்டு வர பல கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. நாட்டுச்சக்கரை என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சர்க்கரை ஆகும்.

நாட்டு சர்க்கரை இயற்கை நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன.

நாட்டு சக்கரையின் நன்மைகள்

நாட்டுச்சக்கரையில் வைட்டமின் பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும்.

நாட்டு சர்க்கரையால் சருமத்தை ஸ்க்ரப் செய்வதன்மூலம், இறந்த செல்கள் சரும துளைகளில் படிந்திருக்கும் அவற்றை நீக்கும் மேலும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.

நாட்டுச்சக்கரையில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது. மேலும், இதில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது.

நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளைப் போக்க நாட்டுச் சர்க்கரை பயன்படுகிறது.

வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், நாட்டுச் சர்க்கரை பயன்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.