எண்ணமே.


ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? எல்லாம் வெற்றியைத் தேடித் தான்!

படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியப் பின் கல்யாணம், 

வெளிநாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம். பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம். இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?

நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும்.அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் மக்கள்..

உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனம் இல்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். 

கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி. 

திருமணத் தடையா.?இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். 

இடுப்பு வலியா? எங்கள் ஆஸ்ரமம் நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.

அதிர்ஷ்டம் வேண்டுமா.? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப் போகிறவர்கள்..

அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை. இல்லவே இல்லை.. என்ன காரணம்?

தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.

நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். 

மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும்..

“என்னால் முடியும்” என்று சொன்னாலும், “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் உங்களின் மனதின் எண்ணத்தின் வெளிப்பாடே..

ஆம்.,நண்பர்களே.,

உங்களது தேவை என்னவோ அதைப் பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக நிச்சயம் மாற்ற முடியும்..

கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வர முடியும்..

தூய எண்ணங்களுடன் நன்மைகள் செய்து வந்தால் மட்டுமே நாம் வெற்றியாளர்கள் ஆக முடியும். 

எனவே நல்வழியைத் தேர்ந்தெடுப்போம், 

நலமுடன் வாழ்வோம்.🌸🙏🏻❤

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.