எதுபோன்ற தவறுகள் நம் வாழ்க்கையை அழித்துவிடும்?

வாழ்வும் தவறும் !

1.வழியில் வெளிச்சம் இருக்கிறது என்று

விழிமூடிச் சென்றால் தவறு.

2.வளைந்தால் பலவீனம் என்றும், நிமிர்ந்தால்

பலமென்றும் கொண்டால் தவறு.

3.தேவையில்லா ஒன்றை வரவேற்க,  தேவையுள்ள ஒன்றைத் தவிர்த்தால் தவறு.

4.ஆட்டின்முன் கட்டும் இலைதழை,  அன்பைத்தான் காட்டுமெனக் கொண்டால் தவறு.

5.எதிரிதான் என்றாலும் நொந்திருக்கும் போது பதிலடி தந்தால் தவறு.

6.விருந்தென்னும் பேர்சொல்லி தன்விருப்பை வந்தோர் வருந்தத் திணித்தால் தவறு.

7.”சொல்லாதே” என்றுனக்குச் சொன்னதை,  ”சொல்லாதே”

என்றெனக்குச் சொன்னால் தவறு.

8.இல்லா இடத்தில் பிறந்தால் தவறில்லை,

வெல்லாது இறந்தால் தவறு.

9.பசிக்காத போது புசித்தால்,  பசியெடுக்கும் போது தவிர்த்தால் தவறு.

10.முன் நகர்ந்த பின்னால்,பின் வாங்குவது   தவறு பின்னோக்கிச் செல்வதில்லை ஆறு

By Avinashi

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.