வயிற்று கொழுப்பை கரைக்க இந்த காய்கறிகளை உண்ணுங்கள்

இன்றைய காலகட்டத்தில் பலர் தொப்பையால் அதிகம் சிரமப்படுகிறார்கள். இதற்கு காரணம் தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான்.

முன்பெல்லாம் உடலுக்கு வேலை கொடுக்கும் வகையிலான பணிகள் இருந்தன. தொப்பையானது ஒருவரது அழகை கெடுப்பதோடு, உயிரைப் பறிக்கக்கூடிய அளவில் உடலில் பல்வேறு நோய்களை வரவழைக்கின்றன.

தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் மட்டுமின்றி ஒருசில உணவுப் பொருட்களும் உதவி புரியும். குறிப்பாக ஒருசில காய்கறிகள் வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவி புரியும்.

அதுவும் இந்த காய்கறிகளை தினமும் உட்கொண்டு வந்தால் விரைவில் தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

📌பச்சை குடைமிளகாய்

குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன மற்றும் இதில் கலோரிகள் மிகவும் குறைவு.

இதில் உள்ள கேப்சைசின் என்னும் கலவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவி புரிகிறது.

இப்படிப்பட்ட குடைமிளகாயை தொப்பைக் குறைக்க நினைப்போர் தினசரி உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைப்பதோடு, தொப்பையும் குறையும்.

📌வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்த காய் என்பதை அனைவருமே அறிவோம். அதே சமயம் இதில் கலோரிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன.

இந்த வெள்ளரிக்காயை எடையைக் குறைக்க அல்லது தொப்பையை குறைக்க நினைப்போர் ஸ்நாக்ஸ் வேளையில் உட்கொண்டு வந்தால் அதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியமான முறையில் பசி அடங்குவதோடு வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவி புரியும். 

📌ப்ராக்கோலி

மக்களிடையே ப்ராக்கோலி மிகவும் பிரபலமாகிவிட்டது. ப்ராக்கோலி பார்க்க காலிஃப்ளவர் போன்று இருந்தாலும் அதன் சுவை தனித்துவமானது.

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதைத் தவிர, சல்போரஃபேன் என்னும் கலவை உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

இந்த ப்ராக்கோலியில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால் ஆரோக்கியமான முறையில் தொப்பையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஏற்ற காய்கறி.

இதை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், தொப்பை வேகமாக குறையும். 

📌பசலைக்கீரை

பசலைக்கீரையில் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

அதோடு இதில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் என்பதால், இது வயிற்றை நிரப்புவதோடு, திருப்தியைத் தரும்.

பசலைக்கீரையில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்புக்களை குறைக்க உதவுவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

📌காளான்

காளானில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு காளான் மிகச்சிறந்த உணவுப் பொருள்.

இதில் கலோரிகள் குறைவு, நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் டி போன்றவை அதிகளவில் உள்ளன.

உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பது அடிவயிற்றில் கொழுப்பு தேங்குவதோடு இணைக்கப்பட்டுள்ளது.

காளானில் உள்ள புரோட்டீன் வகைகள், பசியைக் குறைப்பதோடு, வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கின்றன.

இதன் விளைவாக கண்ட உணவுகளின் மீதான ஆசை குறைந்து, உடல் எடை குறைய உதவி புரிகிறது. 

📌வெங்காயம்

வெங்காயத்தில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

முக்கியமாக இதில் உள்ள அதிகப்படியான க்யூயர்சிடின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி புரிந்து உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கிறது.

இதன் விளைவாக தொப்பை மற்றும் உடல் எடை குறைகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.