பொன்னிறக் காற்று எங்கே…?

நதிக்கரையில் குளித்து விட்டு ஆசிரமம் நோக்கி நடந்து வந்த ஜென் குருவிடம்,

“மனதைத் தூய்மைப் படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் குருவே?” என்று கேட்டான் அவரிடம் கல்வி கற்க வந்த மாணவன்..

மாணவனின் சந்தேகத்தைக் கேட்ட குரு, 

“நீ ஒரு தோட்டம் போட்டு, மரம் செடி கொடி வைத்து நீர் பாய்ச்சு, பிறகு அந்த மரங்களைப் பராமரித்து வா.இயற்கை எழில் சூழ்ந்தக் காட்சி  மனதைத் தூய்மைப்படுத்தும்” என்றார்.

மாணவன் உடனே தோட்டம் அமைப்பதற்கான வேலையில் இறங்கினான். முழுமூச்சாக செயல்பட்டு, பெரும்பாடு பட்டு, அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்கினான். 

வெகு சீக்கிரம் அந்தத் தோட்டம் ஏராளமான மரங்களுடன் பச்சைப்பசேல் என்று காட்சியளித்தது.

அங்கிருந்த காய்ந்த சருகுகள், குச்சிகள், மரப்பட்டைகள் முதலியவற்றைத் தினமும் அப்புறப்படுத்தினான். அந்த இடம் சுத்தமாகக் காட்சியளித்தது.

அதுவே அவனின் மனதிற்கு இதம் அளிப்பதாக இருந்தது. 

அவன் ஒரு நாள் தன் தோட்டத்தைப் பார்வையிட குருவை அழைத்தான். 

தோட்டத்தை வந்து பார்வையிட்ட குரு, எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார். 

மாணவன் அவரிடம், 

“தோட்டம் எப்படி இருக்கு குருவே?” என்றான். 

உடனே குரு “எல்லாம் சரி தான், தூய்மையான தங்கக் காற்றை காணவில்லையே…?” என்றார்.

அவன் அவர் சொன்னது புரியாமல் பார்த்தான். குரு எதையோ தேடுவது போல் அங்கும் இங்கும் தேடினார்.

பிறகு ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளையும், பழுத்த இலைகளையும் அள்ளி வந்து தோட்டத்தில கொட்டினார். 

அப்போது வீசிய காற்றில் மஞ்சள் நிறத்தில் இருந்த பழுத்த இலைகள் தோட்டமெங்கும் பறந்தது.

அதைக் கண்ட குரு,“இதுதானப்பா நான் கேட்ட பொன்னிறக் காற்று, 

இப்போது தான் இந்தத் தோட்டம் உயிரோட்டமாக இருக்கிறது” என்றார். ஒன்றும் புரியாதவனாக அவன் குருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

குரு மேலும் விளக்கினார்,

“நாள் என்பது பகல் மட்டுமல்ல, இரவும் சேர்ந்தது தான். மரணம் என்பது வாழ்க்கையின் இறுதி அல்ல, அதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான்.

அதுபோலவே சருகுகளும், பழுத்த இலைகளும் சேர்ந்தது தான் தோட்டம். 

அழுக்குகளை அப்புறப்படுத்துவதால் ஒருபோதும் மனதைத் தூய்மைப்படுத்தி விட முடியாது. 

மனம் என்பது தூய்மையும், அழுக்கும் இணைந்தது தான். மனதைத் தூய்மைபடுத்த அழுக்குகளை ஒதுக்க நினைக்காதே, அவற்றைக் கடந்து செல்ல நினை போதும்” என்றார்.

“இப்போது உங்கள் கருத்து தெளிவாகப் புரிந்தது குருவே” என்றான் அந்த மாணவன்..

ஆம்.,நண்பர்களே..,

மனித மனமானது தூய்மைப் பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும்..

அன்பு கொண்ட மனிதன் அராஜகப் பாதையை தேர்வு செய்ய மாட்டான் 

பொறாமை போட்டி கோபதாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி, புதிய சாம்ராஜ்யம் உருவாக காரணகர்த்தாவாக மாறி விடுவான்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.