எது சுதந்திரம்

 சுதந்திரம் இந்த தலைப்பை பார்த்தவுடன் சிலர்க்கு முதலில் தோன்றுவது 

நாம் ஆங்கிலேயரிடம் இருந்து எவ்வாறு விடுதலை பெற்றோம் என்றும், 

இன்னும் சிலருக்கு பெண்களுக்கு சுதந்திரம் தேவை, ஆணுக்கு, பெண்  சமம் என்று சமத்துவம்  பேச தொடங்குவர். 

எனக்கு  முதலில் தோன்றியது எங்கள் பள்ளியில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றியவுடன் மிட்டாய்க்கு பதிலாக கேக் தருவார்கள், அது தான்  தோன்றியது (நமக்கு சோறு முக்கியம் பாஸ். சாரி, சாரி  யாரும் கோபப்படாதீர்கள், எனக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவு தான் )

சரி வாருங்கள் எது சுதந்திரம் என்று பார்ப்போம்.

📌சுதந்திரம் !!!!

எனக்கு தெரியவில்லை எது சுதந்திரம் என்று எனக்கு தெரியவில்லை. 

என்னை பொறுத்தவரையில் சுதந்திரம் ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் அது மாறுபடுகிறது. 

ஒருவர்க்கு சுதந்திரமாக தெரிவது மற்றொருவக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

✅நிகழ்வு 1:

செல்வி  நன்கு படித்து வேலைக்கு சென்ற பெண். திருமணத்திற்கு பின் கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியாரை கவனித்து கொள்ளும் பொருட்டு தன் வேலையை விட்டுவிட்டு வீட்டை கவனித்து கொள்கிறாள். 

அவளின் சிறு தேவைக்கும் அவள் கணவனையே எதிர்பார்க்கிறாள். கூட்டு குடும்பத்தில் இருந்து காலை எழுந்தது முதல்  இரவு படுக்கச்செல்லும் வரை வேலை செய்கிறாள் 

எனினும்  கணவன்,குழந்தைகளுடன்  மகிழ்ச்சியான வாழ்வு  வாழ்கிறாள்.

✅நிகழ்வு 2:

பிரியா படித்து முடித்து  நல்ல வேலையில் பணிபுரியும்  நவநாகரிக மங்கை. கணவன் மற்றும் குழந்தையுடன் வசிக்கின்றாள். அவள்  நினைத்ததை நினைத்தவுடன் நிறைவேற்றி கொள்வாள். 

கணவனிடம் ஆலோசிப்பதும்  இல்லை, அவனிடம்  அனுமதி கேட்பதும் இல்லை. கணவனுடன் அவன் கிராமத்திற்கு  செல்லும் போதும் அரைக்கால் பேண்ட்டும், கை இல்லாத சட்டையும் அணிந்து கொள்வாள். 

அவளை பொறுத்தவரை அவளது உடை அவளது சுதந்திரம்.இவளும்  இவள் கணவரும்  மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இப்போது  நீங்கள் சொல்லுங்கள், 

இவற்றில் எது சுதந்திரம். 

சுதந்திரம்  என்பது  

உடுத்தும்  உடையிலா? 

பேசும்  மொழியிலா?

பார்க்கும் பார்வையிலா?

எதில் உள்ளது?  

நம் எண்ணங்களிலேயே உள்ளது. 

செல்வியை கேட்டால் அவள்  கூறுவாள் தான் சுதந்திரமாக தான்  இருக்கிறேன் என்று. பிரியாவும் அவ்வாறே கூறுவாள். 

ஆனால் இருவரது வாழ்கை முறையில் எவ்வளவு வித்தியாசங்கள். 

ஒருவரது வாழ்வில்  சுதந்திரம் உள்ளது எனில் மற்றவரின் வாழ்வில்  சுதந்திரம் இல்லை எனலாம். ஆனால் இருவருமே  சுதந்திரமாக தான்  வாழ்கிறார்கள் தத்தமது வழியில்.

சுதந்திரம் என்பது செய்யும் செயலிலோ, உடுத்தும் உடையிலோ இல்லை.அவரது எண்ணங்களிலேயே உள்ளது.  

ஒருவரின் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கின் நுனி வரையே! என்று எங்கோ கேட்ட ஞாபகம். 

அடுத்த வரை துன்புறுத்தாமல் நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் சுதந்திரம் உள்ளது.

ஒருவற்கு நம் செயலிலால் சிறு தீமை ஏற்படுமேயானால் அது சுதந்திரம் அன்று.

அனைவர்க்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். 

நமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தினை தவறான வழியில் செலுத்தாமல் நன்முறையில்  பயன்படுத்துவோம். நம் நாட்டையும் வளம் பெற செய்வோம்.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன்  நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.