உழைக்காமல்

உழைக்காமல் பணக்காரனாக விரும்பும் யாரும் அறிவாளி அல்ல.

லாட்டரி டிக்கட்டுகளை நம்புகிறவர்கள்,

சினிமாவில் வருவது போல் முதல் காட்சியில் ஆட்டோ ஓட்டி விட்டு அடுத்தக் காட்சியில் பென்ஸ் கார் ஓட்டும் கதாநாயகனைப் போல ஆக விரும்புகிறவர்கள்,

அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள்,

கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் கடவுள்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஏதாவது கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிறவர்கள்.

இவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா…?

தயவு செய்து வெளியே வாருங்கள். உழைக்காமல் முன்னேற முடியாது.

உழைக்காமல் தற்காலிகமாக மேலே வந்தவர் ஒரு போதும் நிலைக்க முடியாது. புரிந்துக் கொள்ளுங்கள்.

உழைப்பு என்றதும் கல் உடைப்பது, உழுவது, கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம்

பாடுபடுவது, சிரமங்களை மகிழ்வுடன் ஏற்பது, சினிமா, சீட்டு, , சிகரெட்டு என்கிற இளவயது இன்பங்களில் தன்னைத் தொலைக்காமல் பல மணி நேரம் படிப்பது கூட உழைப்பது தான்.

பல மைல் பயணித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய் வருவது கூட உழைப்புத் தான்.

சோம்பி இராத சுகம் தேடாத எல்லா முயற்சிகளும் உழைப்புத் தான்.

இப்படி உழைத்தவர்கள் தான் உயரமான இடங்களில் பின்னர் உட்கார்ந்தவர்கள்.

ஆம்..,நண்பர்களே.,

கடின உழைப்பு வெற்றியைத் தராவிட்டாலும்,

வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.