பெண்கள் மாரடைப்பு பிரச்சினையிலிருந்து தற்காத்துக்கொள்ள இதை கடைப்பிடியுங்கள்.

தற்போது அதிகளவில் பெண்கள் மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கு உள்ளாகின்றனர். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வோடு செயற்படவேண்டும்.

பொதுவாகப் அனேகமானப் பெண்கள் தங்களை விட ஏனையோரின் நலன் குறித்து அதிக அக்கறையுடன் செயற்படுவர்.

பெண்கள் இதய நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள 

ஆனால் தன் ஆரோக்கியத்தில் அக்கறைக் கொண்டு செயற்டபடும் பெண்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.

பெண்கள் தனக்கு ஏற்படும் இதய நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமானதாகும்.​

✅1.இரத்த அழுத்தப் பரிசோதனை

கட்டாயமாக இரத்த அழுத்தப்ப பரிசோதனையை தவறாது செய்துக்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்டிரால் இரண்டும்தான் இதய நோய்களுக்கான முதன்மையான காரணம் என்பதை மறக்காதீங்க.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அடிக்கடி தலை சுற்றுவது போன்ற அறிகுறியும் உண்டாகும்.

அதனால் பெண்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்களுடைய இரத்த அழுத்தத்தின் அளவை பரிசோதனை செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இதய நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும்.

✅​2.இதயத் துடிப்பின் வேகத்தை கண்காணித்தல்

இந்த சோதனையை பெரிய அளவில் ஆண், பெண் இருவருமே செய்வதில்லை.

வழக்கமாக இதயத் துடிப்பை கண்காணிப்பதைப் போலவே, கொஞ்சம் வேகமாக நடைப்பயிற்சி செய்துவிட்டும் இதயத் துடிப்பை கண்காணிக்க வேண்டும்.

அதேபோல த்ரெட்மில்லில் நடந்துவிட்டே அல்லது ரன்னிங் செய்துவிட்டு உடனே இதயத் துடிப்பை கணிக்க வேண்டும்.

இந்த எல்லா நிலைகளிலும் இதயத் துடிப்பின் வேகம் எப்படி இருக்கிறது என்று கணக்கிட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது மிக முக்கியம்.

✅​3.புகைப்பிடித்தல்

ஆண்களை விடவும் பெண்களுக்கு புகைப்பிடித்தல் அதிகமான பாதிப்புகளைக் கொடுக்கும்.

குறிப்பாக கர்ப்ப காலம், நீரிழிவு பிரச்சினை இருக்கும் போது, பாலூட்டும் சமயங்களில் முக்கியமான தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் புகைப்பிடித்தல் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பபதற்கான காரணத்தில் ஒன்றாக இருக்கிறது.

அதனால் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை முதலில் நிறுத்துங்கள்.

✅​4.அறிகுறிகளை கண்டுகொள்ளாமை

எல்லா நோய்களைப் போலவே இதய நோய்களும் வருவதற்கு முன்பாக சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

அந்த அறிகுறிகளை பெண்கள் ஆரம்ப காலத்திலேயே பெரிதாகக் கண்டு கொள்ளாமல் விடுவார்கள்.

மார்பு பகுதி, தோள்பட்டைகளில் ஏற்படும் வலி போன்றவற்றை கவனிக்காமல் விட்டு விட்டு இதய நோய் ஆபத்து பெரிதான பிறகு எந்த பயனும் இல்லை.

அதனால் சின்ன சின்ன அறிகுறிகள் தோன்றும்போதே அதை கண்காணித்து பரிசோதனை செய்வது நல்லது.​​

✅5.ஹார்மோன் தெரபி

நிறைய பெண்களுக்கு இந்த கருத்து இருக்கிறது. மெனோபஸ் காலகட்டத்தில் ஏற்படும் சில ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவரே பரிந்துரைத்தாலும் ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபிகள் செய்து கொள்ள மறுக்கிறாகள்.

காரணம், அதுபோல் ஹார்மோன் தெரபிகள் செய்து கொள்வது இதய ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல, வேறு நிறைய பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அது மிகவும் தவறான ஒன்று. மெனோபஸ் காலகட்ட அறிகுறிகளையும் பாதிப்புகளையும் குறைப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.

அதுவும் குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே. அதனால் இதயத்துக்கு பெரிதாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது.​

✅6.கர்ப்ப கால பிரச்சினைகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒருசில பிரச்சினைகளில் இந்த கர்ப்ப கால நீரிழிவும் ஒன்று.

இந்த பிரச்சினையினால் கூட இதய நோய் ஆபத்துகள் வருமோ அல்லது குழந்தை பிறக்கும் போது இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துமோ என்கிற பயம் பெண்களுக்கு இருக்கிறது.

சரியான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சை எடுத்துக் கொள்வது இந்த பயத்தைப் போக்க உதவி செய்யும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.