நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை.பல பேர்கள் தங்களின் பொருளாதாரத்தைச் சீர்படுத்த இவரிடத்தில் ஆலோசனையை நாடுவார்கள்..

ஒரு நாள் அவர் வாழ்கின்ற பகுதியைச் சேர்ந்த சிலர் அவரைப் பார்த்து" ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. 

ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக  இருக்கிறானே!  தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? என்று கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். நீங்கள் ஊரில் மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதை விட, உங்கள் பையனை அறிவுள்ளவனாக வளர்த்துங்கள் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்கள்..இதைக் கேள்விப்பட்ட அந்த 

அறிஞர் மிக வருத்தம் அடைந்தார். பையனை அழைத்தார்.. ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்றார்.

பையன் சொன்னான்.. ”தங்கம் தான் அப்பா.. என்றான்..

”பின் ஏன் மற்றவர்கள் கேட்கும் போது வெள்ளி என்று சொன்னாயாமே?

பையன் சொன்னான்..

” தினமும் நான் பள்ளி செல்லும் போது ஒருவர்  ஒரு கையில் தங்க நாணயமும்,மறுகையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”..என்பார்..

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன்.உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்து என்னைக் கேலி செய்வார்கள்..நான் அந்த வெள்ளி நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். 

எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான் அப்பா என்றான்.

அறிஞர் திகைத்தார்..!

ஆம்....நண்பர்களே.,

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. 

ஆனால் நாம் தோற்பது இல்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக்

கொண்டு இருப்பார்கள். 

ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும் போது நாம் வென்று இருப்போம்! 

எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..🌸🙏🏻🌷

ஆக்கம்.

உடுமலை. சு.தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.