குப்பை வண்டி விதி’ தெரியுமா..?

மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், மனதில் ஏற்கனவே உள்ள தீயஎண்ணங்களைத் தூக்கி எறிய வேண்டும்.. மனதில் உள்ள குப்பைகளை வெளியேற்றி விட வேண்டும். அல்லது நெருப்பிட்டு சாம்பலாக்கி விட வேண்டும்.. ஆனால் நம்மில் பலர் மேலும் மேலும் மனதில் குப்பைகளைச் சேர்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஒரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால்!, புகைவண்டி நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி வாகனம் ஒன்றைப் பிடித்து உடனே புகைவண்டி நிலையம் செல்லுமாறு ஓட்டுனரிடம் கூறினார்...

இவர்கள் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது, இவர்களுக்கு முன்னால் சென்ற வாகனம் ஒன்று திரும்புவதற்கான சமிஞ்ஞை (சிக்னல்) எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பியது.

ஒரு கணம் நிலைதடுமாறிய வாகன ஓட்டுனர், உடனே சக்கரத் தடையை (பிரேக்) மிதித்து சரியாக முன் சென்ற வாகனத்தை இடிப்பதற்கு ஒரு அங்குலம் முன்னதாக நிறுத்தினார்...

அந்த வாகனத்தில் இருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை மரியாதையின்றி நாகூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டுவதற்கு ஆரம்பிக்கிறார்...

இந்த வாகன ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் கூறாமல் ஒரு புன்னகையை மட்டும் சிந்தி விட்டு விடைபெறுவது போல கைகளைக் காட்டுகிறார். அவர் அப்படி செய்தது, ஏதோ நண்பரைப் பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வாகனம் ஒட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வது போல இல்லை...

"ஏன் அவரை விட்டீர்கள்...? நீங்களும் அவரை எதிர்த்துப் பேசி இருக்கலாமே..! அவன் மேல் தவறினை வைத்துக் கொண்டு நம் மேல் சினமுறுகிறார்...?” என்று அதிகாரி வாகன ஓட்டுனரிடம் கேட்கிறார்...

அதற்கு வாகன ஓட்டுனர் கூறியது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்...

இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர்... பல மனிதர்கள் இப்படித் தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறையக் குப்பைகளை, அழுக்குகளை, வைத்திருக்கிறார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்து இருக்கும்...

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள்...

அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டி விட்டு நாம் போய்க் கொண்டே இருக்க வேண்டும்..

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நாம் பணிபுரியும் இடத்திலோ, அல்லது வீட்டிலோ, தெருவில் போகும் மற்றவர்களிடமோ நாம் கொட்டக் கூடாது...

"நம் பேர் தான் நசிந்துப் போகும்” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்து விட்டார். இதில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்தி யாதெனில் 

வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும், இந்தக் குப்பை வண்டிகளை தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்...

ஆம் நண்பர்களே...!

🟡 அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ!, பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஒரு புன்னைகையை மட்டும் பதிலாகத் தந்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள்...!

🔴 நம்மை சரியாக நடந்து கொள்வர்களை நேசிப்போம். அப்படி நடந்து கொள்ளாதவர்களிடம் அவர்கள் மீது அனுதாபம் கொள்வோம். இது ஒன்றே நாம் செய்ய வேண்டியது...!!

⚫ ஆம்!, வாழ்க்கையைப் பத்து விழுக்காடு நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதைப் பொருத்தது. மீதம் தொன்னுறு விழுக்காடு. நாம் எப்படி வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தது...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.