பெண்கள் அதிகம் அழ காரணம் என்ன?

மனோரீதியாக சில விஷயங்களை கவனித்தால் அது ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பெண் அதிகம் அழுகிறாள் என்றால் அவள் எதற்காக அழ வேண்டும்? அவளுக்கு தேவை தான் என்ன? ஒருவர் கூறும் பொய்யை மற்றவர்கள் எளிதாக கண்டுபிடிக்க அவர்கள் இந்த மனநிலையில் இருந்தால் போதுமா? யாரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இது போன்ற விஷயங்களை நாம் மனரீதியாக எப்படி விடை காண்பது? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

ஒருவர் கூறும் பொய்யை இன்னொருவர் கவலையாக இருக்கும் பொழுது எளிதாக கண்டுபிடித்து விடுவார்களாம். கவலையாக இருக்கும் மனிதன் பொறுப்புணர்வுடனும் இருப்பான். மற்ற எந்த விஷயங்களைப் பற்றிய தேவையில்லாத சிந்தனைகளும் அவனிடத்தில் இருப்பதில்லை. மனிதர்களைப் பற்றிய சிந்தனையும், உலகத்தைப் பற்றிய சிந்தனையும் கவலையாக இருக்கும் போது அதிகம் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஒருவர் கூறும் பொய்யை அவரால் எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

மனிதனுடைய மூளை பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கும். அதனால் தான் அமைதியான இரவு நேரத்தில் நம்மால் அதிகப்படியான சிந்தனைகளை செய்ய முடிகிறது. 

ஒரு மனிதனால் 20 நாட்கள் ஆனாலும் சாப்பிடாமல் இருக்க முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் ரெண்டு நாள் கூட இருக்க முடியாது. அனைத்து நகங்களை காட்டிலும் நடுவிரலுடைய நகங்கள் அதிக வேகமாக வளரும்.

இப்படி மனோதத்துவ ரீதியாக யோசிக்கும் பொழுது நம் உடலில் இருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களை கண்ணீர் நீக்குவதால் அழுவது கூட ஒரு விதத்தில் நல்லது தான். அதற்காக எப்பொழுதும் அழுது கொண்டிருக்க கூடாது. ஒரு பெண் அதிகமாக அழுகிறாள் என்றால் அவளிடத்தில் மனம் விட்டு பேச சரியான ஆள் இல்லை என்று அர்த்தம். திருமணமான பெண்ணோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணோ எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்கள் நிம்மதியாக இருக்க மனதில் இருக்கும் விஷயத்தை எல்லாம் தயக்கமில்லாமல் ஒருவரிடம் கூறி விட்டாலே போதும். அவர்களுக்கு என்று நீங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கினால் அவர்கள் எதற்காகவும் கண்ணீர் விட மாட்டார்கள்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவர் தனியாக இருக்கும் பொழுது உண்மையில் தனிமையை என்றும் உணர்வது இல்லை. அவர்களை பற்றிய கவலை மற்றவர்களுக்கு இல்லை என்கிற சூழ்நிலை வரும் போது தான் அவர்கள் தனக்கு துணை யாரும் இல்லை என்கிற தனிமை உணர்வை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மைப் பற்றி கவலைப்பட யாராவது ஒருவராவது இந்த உலகத்தில் இருந்து விட்டால் நாம் எவ்வளவு நேரம் தனிமையாக இருந்தாலும் தனிமையை நிச்சயம் உணர மாட்டோம் என்பது தான் உண்மை.

சிலர் அதிகம் பேசும் ஆற்றலை கொண்டு இருப்பார்கள். அவரிடம் பேசினால்! ‘போதும்’ என்று கூறவே முடியாது, அடுத்து அடுத்து ஏதாவது ஒரு விஷயம் பேசுவதற்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் இன்னொரு சிலரோ கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். கூச்ச சுபாவம் கொண்டவர்கள் அதிக கவனிப்பு திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். அதிகம் கவனிக்கும் கூச்ச சுபாவம் கொண்டவர்களிடமிருந்து நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேசும் பொழுது என்ன பேசுகிறோம்? என்கிற கவனிப்புடன் அவர்களிடம் பேசுவது நல்லது. எதையாவது உளறி வைத்தால் பிறகு ஆபத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.