குதிகால் வெடிப்பு குணமாக.

குதிகால் வெடிப்பு என்பது அதிகப்படியான வறட்சியினால் கால்களில் வரும் பித்த வெடிப்பகும்.

ஆகவே தினம்தோறும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். 

கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து , இந்த கலவையில் விளக்கெண்ணெய்யுடன், பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால், பித்த வெடிப்பு நீங்கும்.

மெழுகுடன் சம அளவு கடுகு எண்ணை சேர்த்து கலந்து நன்கு குழைத்துக் கொள்ளவும். அதனை குதிகால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடவ வேண்டும்.அதன் மீது லேசான துணி போட்டு மூடிவிடவும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் பித்த வெடிப்பு மறையும்.

ஒரு கைப்பிடியளவுட படிகாரத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு நன்றாக பொரித்துக் கொள்ள வேண்டும். அதனை எடுத்து அதனுடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணைய் சேர்த்து தடவி வர பித்த வெடிப்பு விரைவில் குணமாகும். 

கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து பாதம் பளபளப்பாகும். 

வெங்காயத்தை வதக்கி, பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு மறையும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து பின் கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்குவதோடு வெடிப்பையும் மறைய செய்யும்.

கடுகு எண்ணெயை தினமும் கால், பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு மற்றும் தடிமனான அதன் தன்மை நீங்கி மிருதுவாகும். 

மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது கால் வெடிப்பை நீக்க உதவுகிறது.

கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் (அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு )இவை இரண்டும் தேவையான அளவு எடுத்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி வெடிப்பு உள்ள இடத்தில் தடவிவர உடனடி பலன் கிடைக்கும். 

உருளைக்கிழங்கை காய வைத்து பவுடராக்கி பின்பு அதை தண்ணீர் விட்டு குழைத்து பூசி வந்தால், வெடிப்பு குறையும். மேலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மென்மையாகும்.

நன்கு பழுத்த பப்பாளி பழத்தை நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு மறையும். 

வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படித் தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆமணக்கு இலை, சீந்தில்கொடி, குப்பை மேனி மூன்றையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வச்சுக்கணும். அந்த எண்ணெயை இரவு படுக்கப் போகுமுன் பாதத்தைச் சுத்தமாக தேய்த்து கழுவிட்டு, வெடிப்பு மேல பூச வேண்டும். தொடர்ந்து இந்த எண்ணெயைப் பூசிக்கிட்டே வந்தால் பாதவெடிப்பு மறைந்து பளபளபாகும்.

கால் கப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் அந்தக் கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைக்கவேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் கிரீம் தடவ வேண்டும். இப்படி செய்து வர பாதவெடிப்பு மறையும்.

முதல் நாள் நார் கொண்டு தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயக்க வேண்டும்.தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மென்மையாக ஆகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும். 

துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேட்ஸ் செய்து, பாதங்களில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.

ஓட்ஸ் பொடி, அரிசி மாவு மற்றும் தேன் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து, அத்துடன் பாதாம் எணணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இருபது நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வெடிப்பு மறையும்.

ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை சரிசமமாக எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அதில் பாதங்களை இருபது நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் வறட்சியடையாமல் வெடிப்புக்களும் வராமல் இருக்கும்.

அரை பக்கெட் வெதுவெதுப்பான நீரில், 1 கப் தேன் சேர்த்து கலந்து, அந்த நீரில் பாதங்களை பதினைந்து நிமிடம் ஊற வைத்து, மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி ஸ்கரப் செய்து வர வேண்டும். இதன் மூலமம் குதிகால் வெடிப்பைத் தடுக்கலாம்.

கால் பொறுக்கும்அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும். 

இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வரலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம். 

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். 

இரண்டு டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள். பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் , நேரம் ஒதுக்கி செய்து வந்தால் மட்டுமே பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாகவும் மென்மையாகவும் மாறும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.