உடற் பயிற்சி செய்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்.

உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தால், தசை வலியைத் தடுக்கலாம்.

ஆப்பிளில் உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. தினமும் உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு ஆப்பிளை சாப்பிட்டு மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, உடற்பயிற்சிக்கு முன் குடித்தால், உடற்பயிற்சியின் போது உடலின் ஆற்றலானது அதிகரிக்கும்.

பருப்பு வகைகளில் ( ஊற வாய்த்த கொண்டை கடலை , முளைகட்டிய பயறு வகைகள்) அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்த பின், உடலில் உள்ள தசை வளர்ச்சிக்கு அதிக புரதச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய புரதச்சத்து, முட்டையில் உள்ள வெள்ளை கருவில் போதுமான அளவில் உள்ளது.

நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் வளமையான அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் கால்சியம் அடங்கியிருக்கிறது. இதில் எளிமையான கார்போஹைட்ரேட் இருப்பதால், செரிமானம் சுலபமாக நடக்கும். மேலும் கிளைக்கோஜென்னின் அளவை அதிகரிக்கும். அதனால் உடலின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

கோழிக்கறியில் புரதம், ஒமேகா-3 மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள உயிரணுக்களின் மெட்டபாலிச ஆற்றலை அதிகரிக்கும்.

2 வாழைப்பழம் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது.

ஒரு பௌல் ஓட்ஸில் பால் மற்றும் பெர்ரிப் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.

வராம் ஒரு முறை எதாவது அசைவ சூப் எடுத்து கொள்வது எலும்பு மற்றும் தசைகளுக்கு வலுவூட்டும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.