கழுத்தில் உள்ள கருமை நீங்கவேண்டுமா?

பொதுவாக கழுத்து பகுதிகளில் கருமை நிறம் ஆண்களுக்கு காலர் துணி கழுத்தை மறைத்துக்கொள்வதால் ஏற்படுகிறது.

அதேபோல் பெண்களுக்கு அவர்கள் அணியக்கூடிய அணிகலன்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் ஏற்படலாம்.

பெண்களுக்கு கழுத்தில் செயின் எப்போதும் அணிந்து கொண்டே இருப்பதால் அது கழுத்தில் பதிந்து கருப்பாகிவிடும்.

இதிலிருந்து நிவாரணம் பெற வீட்டில் செய்யப்படும் இயற்கைமுறை பேக்கை பயன்படுத்தி கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தை நீக்கலாம் 

📌தேவையான பொருள்

👉எலுமிச்சை பழம்-1

👉சர்க்கரை-1 டீஸ்பூன்

👉கடலை மாவு-2 டீஸ்பூன்

👉ரோஸ் வாட்டர்-தேவையான அளவு  

📌செய்முறை

👉ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்து அதில் ஒரு டவள் கொண்டு கழுத்தை முதலில் நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.

👉அதன்பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒருபகுதியில் வெள்ளை சர்க்கரையை தொட்டு கழுத்துப்பகுதியில் உள்ள கருப்பு பகுதியில் 10 நிமிடம் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

👉அதன்பிறகு டவள் கொண்டு சுடு தண்ணீரில் முக்கி நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.

👉கடலை மாவு அல்லது முல்தானிமெட்டி இவை இரண்டில் எது உங்களுக்கு கிடைக்கிறதோ அதனை கொண்டு ரோஸ்வாட்டரில் கலந்து பேக் மாதிரி கழுத்தும் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும்.

👉10-15 நிமிடத்திற்கு பிறகு ஈரமான டவள் கொண்டு நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.

👉இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை செய்து வந்தால் ரொம்ப சீக்கிரமாகவே கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறைந்துபோகும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.