உணவை வீணாக்காதீர்கள்.

உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அந்த நாட்டிற்குப் புதிதாகச் சென்ற நம் இந்தியர் ஒருவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்குத் தனது குடும்பத்தோடு இரவு உணவு உண்பதற்காகச் சென்றார்.

ஏகப்பட்ட அயிடங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். குழந்தைகளும் மனைவியும் சரியாய் சாப்பிடாததால் பாதிக்கு மேல் மீந்து விட்டன. நம் இந்தியர் பில் கேட்டார். சிறிது நேரத்தில் பரிமாறியவர் பில்லைக் கொண்டு வந்து கொடுத்தார். 

பில்லைப் பார்த்ததும் நம் இந்தியருக்கு அதிர்ச்சி காரணம் 500-மார்க்குக்கு பதிலாக 1000-மார்க் என்று இருந்தது. கடுப்பான நம் இந்தியர் கத்த ஆரம்பித்தார்.

இது என்ன அநியாயம், அக்கிரமம்..? யார் உங்களது மேனேஜர் வரச்சொல் அவரை..! நான் புதியவன் என்பதால் எல்லோரும் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா,? பில் தொகை இரண்டு மடங்காக இருக்கிறதே.., நான் போலீசைக் கூப்பிடுவேன் என்றார்.

மேனேஜர் வந்து அனைத்தையும் விசாரித்து விட்டு மெல்ல சிரித்துக் கொண்டே கூறினார். தாராளமாய்க் கூப்பிடுங்கள். அவர்கள் வந்தால் மோசமாகப் போவது உங்கள் நிலைமை தான்.

உண்மையில் நீங்கள் சாப்பிட்டதற்கான பில் தொகை ஐநூறு மார்க் தான் மறுப்பதற்கில்லை, ஆனால் நீங்கள் சாப்பிடாமல் வீணடித்த உணவிற்காக அபராத தொகை ஐநூறு மார்க். பணம் உங்களுடையது தான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் உங்களால் வீணடிக்கப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை,

அது இந்த சமுதாயத்தின் சொத்தும் கூட. நீங்கள் இப்படி வீணாக்காமல் இருந்திருந்தால் அது இன்னொருவரை சென்றடைந்து அவருடையப் பசியைத் தீர்த்திருக்கும்.

போதிய உணவு கிடைக்காமல் பசியால் வாடுவோர் உலகம் முழுவதும் இருக்க.., உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதற்குத் தான் நீங்கள் ஆர்டர் கொடுத்திருக்க வேண்டும்.

இப்படி உணவுப்பொருட்களை வீணடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்களது ஹோட்டலின் மெனுகார்டுக்கு கீழே எங்கள் ரெஸ்ட்டாரெண்ட்டின் விதிமுறைகளை எழுதியிருக்கிறோம். 

நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

இங்கு மட்டுமல்ல ஜெர்மனியின் பெரும்பாலான ஹோட்டல்களில் இதே விதிமுறைகள் தான் வழக்கத்தில் உள்ளது.

இதில் இருக்கும் உண்மையை நம் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தினமும் இணையங்களின் வாயிலாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் எப்படி துன்பப்படுகிறார்கள் என்று புகைப்படங்கள் வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பார்க்கிறோம்.

ஆகையால்..,

பொதுஇடங்கள், விழாக்கள் மற்றும் ஹோட்டல்களில் மட்டுமல்ல வீடுகளிலும் கூட உணவுப் பொருட்களை வீணடிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்..

ஆம்.,நண்பர்களே.,

முதலில் அதனை நம்மிடம் இருந்து துவக்குவோம்.

இனி ஒருநாளும் எந்த இடத்திலும் உணவுப் பொருளை வீணடிப்பது இல்லை என்று இன்று முதல் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

நாம் ஒவ்வொருவரின் மொத்தம் தான் இந்த நாடு.

ஆகையால் இன்று நாம் திருந்தினால் நாடும் ஒருநாள் திருந்தும்.......🌷🙏🏻🌸

ஆக்கம்.

உடுமலை சு.தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.