பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதா ...கெட்டதா!

உடல் ஆரோக்கியத்திற்காக நாம் பலவிதமான ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொண்டு வருவோம்.

அதில் ஒன்று தான் காலையில் பப்பாளியை உட்கொள்வது. பப்பாளி ஆரோக்கியமான பழமாக இருந்தாலும் அந்த பப்பாளியை அளவாக சாப்பிட வேண்டும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பப்பாளியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாகவும் இருப்பதால் எடையைக் குறைக்க நினைப்போருக்கு அற்புதமான பழம். சிலருக்கு பப்பாளியை ஒருசில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

📌சிறுநீரக கல்

ஒரு சிறிய பப்பாளி பழத்தில் 96 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளன.

எனவே இந்த பப்பாளியை வெறும் வயிற்றில் அதிகமாக உட்கொள்ளும் போது அது சிறுநீரகங்களில் கற்களை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். 

📌தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லதல்ல

பப்பாளி பழத்தில் உள்ள நொதிப் பொருட்கள் குழந்தைகளுக்கு நல்லதல்ல. அது பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும்.

ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பப்பாளி சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே உட்கொள்ள வேண்டும். 

📌சரும அரிப்பு

பப்பாளி சாப்பிட்டால் சருமம் பொலிவாக இருக்கும்.

ஆனால் அந்த பப்பாளியை வெறும் வயிற்றில் ஒருவர் அதிகமாக உட்கொள்வதால் அது சருமத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது.

ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அனைத்துவிதமான சருமத்தினருக்கும் பொருத்தமானது அல்ல.

இந்த லேடெக்ஸ் சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தலாம்.

📌இதயத் துடிப்பை மெதுவாக்கும்

ஏற்கனவே மாரடைப்பு வந்த நோயாளிகள் பப்பாளியை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில் இப்பழத்தில் உள்ள பாப்பைன் என்னும் பொருள் இதயத்துடிப்பைக் குறைக்கும் திறன் கொண்டது.

இதன் விளைவாக மாரடைப்பு போன்ற தீவிரமான இதய நோயைத் வரத் தூண்டும். 

📌சுவாச அலர்ஜி

தினமும் காலையில் நன்கு கனிந்த பப்பாளியை சாப்பிடுபவரானால், அதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதி ஒரு சக்தி வாய்ந்த அலர்ஜி பொருளாகும்.

எனவே ஏற்கனவே சுவாச பிரச்சனையைக் கொண்டவர்கள் பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம் போன்ற பிரச்சனைகளை வரத் தூண்டும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.